தனிப்பறவை
தெளிவானதொரு பிரக்ஞையற்ற
சூழலில் இந்த அறையிருக்கிறது
அறைக்குள் நான் வசிக்கிறேன்
சிந்தனை, சுய எள்ளல்,
நினைவு தப்புதல், நீளும் பகல் தனிமைகள்,
சுயமைதுனம், போதை-
பெருகும் ஆற்றாமைகளின் பட்டியல்
இரவைக் கடக்க தேவை எட்டு மணி நேர மரணம்.
Read more...
மற்றுமொரு நாள்...
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
அழகான எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.
Read more...
உருவெளிச் சிதைவுகள் (4) - Adult content
>> Friday, July 25, 2008
‘மலபார் ப்ளீஸ் வாயை மூடு, தெய்வீகக் காதலை கேவலப்படுத்தாத'
“ஒஹோ, தெய்வீகக் காதல் கக்கூஸ் வாசல்லதான் வருமா?”
‘இல்ல கோபி, கொஞ்சம் skid ஆயிட்டேன், அதான் தொடச்சுட்டிருக்கேன். நீ என்ன திரும்ப மேலே?’
‘அனிதாவ பார்த்ததுக்கப்புறம் skid ஆகுறியா? அனிதா எல்லாம் சொன்னா, ஒண்ணும் பிரச்சினையில்ல, நான் அனிதா பேரன்ட்ஸ்கிட்ட பேசி முடிச்சுடுறேன், நீயும் அப்பா அம்மாவோட வந்துறு, என் கல்யாணத்துல வச்சு முடிவு பண்ணிக்கலாம்'
"ஏன், கோபி மாமா பார்த்தா இந்த டீல் ஊத்திக்குமா? பேசாம இதையெல்லாம் அனிதாவுக்கு கிப்டா அனுப்பிடேன், ஊதியாவது விளையாடட்டும்."
‘கோபி உனக்கு எதுவும் கேட்டுச்சா?’
‘இல்ல'
‘நீ கிளம்பு, அப்புறமா பேசிக்கலாம்'
‘அப்போ அனிதா?’
‘அவ இங்கதான்பா இருக்கா’ என்றேன் கண்ணாடியை பார்த்தபடி !
‘What do you mean?’
‘Some kind of Visual Hallucination, இதயத்துல இருக்காடா! ’ என்று நெஞ்சைத்தடவினேன் .
"இதோடா, உத்தமபுத்திரன் நெஞ்சத்தடவுறான்,அவ இருந்திருந்தா..."
'செருப்பு பிஞ்சுடும். ப்ளீஸ் என்னய தனியா விடுங்களேன், எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கட்டுமே. நான் வேண்ணா வாரம் ஒருதடவ உங்க கூட இருக்கேன். '
கோபி சிரித்துவிட்டு கிளம்பினான்.
"நீ மூட்றா, எங்கள மேக்கப் இல்லாமப் பார்த்தா உனக்கு எழும்பாதா,அனிதாவ காலையிலே தூங்கி எந்திரிச்சோன்னே போய் பாரு, அத்து எறிஞ்சுடலாம்னு தோணும்."
'ப்ளீஸ் நாம அப்புறமா பேசித்தீர்த்துக்கலாம். ஞாயித்துக்கிழம முடிய இன்னும் 10 மணி நேரம் இருக்கு.'
‘இரு கோபி, நானும் வர்றேன், அவங்க ரெண்டுபேரும் எங்கே?’
‘கார்ல இருக்காங்க'
கீழே இறங்கும் போது உங்கள் அன்பு அறிவிப்பாளன் அக்குள் ஹமித் என்ற குரல் டீக்கடை ரேடியோவில் கேட்டது !
தம்பி யார்கிட்ட பேசிட்டுருக்கீங்க?
இந்தா இவங்ககிட்டதான்.
யாரும் இல்ல?
போய்யா பொட்டைக் கண்ணா।
அனிதா அக்குள் தெரியாமல் கையாட்டி விடை கொடுத்தாள்। நல்ல நாள் பிஸ்கெட் துகள் அக்குளில் ஒட்டியிருப்பதை நான் பார்த்துவிடக்கூடாது என நினைத்திருக்கலாம். அன்று மாலை அண்ணாச்சி கடையில் மளிகை வாங்கும் போது கேட்டேன்.
'அண்ணாச்சி veet இருக்குங்களா?'
'இல்லப்பா, anne french தான் இருக்கு'
'சரி ஒரு கிலோ குடுங்க'
“ஒரு கிலோவா?”
நிலவறையிலிருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பொலிகள் என் காதுக்குக் கேட்கிறது. உங்களுக்கு?
முற்றும்
Read more...
உருவெளிச் சிதைவுகள் (3) - Adult content
‘ம்ம், புடிச்சுருக்கு உன்ன, உன்ன விட உன் அக்குளை.’
‘ச்சீ, அதெயெல்லாமா பார்த்து பொண்ணு புடிச்சுருக்குன்னு சொல்றது.’
‘அத சாதாரணமா பேசாத, நெறயப் பேரோட தாம்பத்ய வாழ்க்கை மோசமாயிருக்கக் காரணம் pheromons match ஆகாததுதான். கூடிய சீக்கிரம் அதீதன் சொல்ல நண்பர் சுந்தர் இதப்பத்தி ***** ***** 45(18) அல்லது ***** **** 45 (27) ல எழுதுவார்.’
‘அவுங்க ரெண்டு பேரையுமே எனக்குத் தெரியாது.’
‘சுந்தரைத் தெரிஞ்சுக்கோ, அதீதனை தெரிஞ்சுக்க வேண்டாம்.’
‘ஒரு தடவை உன் அக்குள smell பண்ணிக்கட்டுமா?’
‘ம், பண்ணிக்கங்க.’ அனிதா கைகளைத் தூக்கியவாறு ஒயிலாக சாய்ந்து நின்றாள். விரகத்தில் கண்கள் கிறங்கி, சற்றே பிளந்து நிற்கும் உதடுகளை முத்தமிடத் தோன்றியதை தனிக்கதையாக எழுதுகிறேன்.
‘ம்ம்ம், ம்ம்ம்ம், nice.’
‘ச்சீ naughty boy.’
கதவு திறந்து அனிதா வெளிப்பட்டாள். பிம்பம் கண்ணாடியிலிருந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் இங்க நிக்கறீங்க, எனக்கு ஹாலுக்குப் போக வழி தெரியும்’ என்றாள் சிரித்துக்கொண்டே.
‘அனிதா நல்ல smell அது, you know…’
‘என்ன சொல்றிங்கன்னு புரியல.’
ஹாலிலிருந்து மீசை கூப்பிட்டது,
‘அனிதா வர்றப்போ தண்ணி கொண்டு வாம்மா.’
‘ok uncle கூப்பிடுறார், உங்க நம்பர் கொடுங்க, நைட் கூப்பிடுறேன்.’
‘இல்ல, அது வந்து…’
Ting ting…கோபி உள்ளே நுழைந்தான், ‘சரியான வெயில்டா மச்சி’ என்று கூறியவாறு என்னைப் பார்த்தவன் அனிதாவையும் பார்த்தான்.
லேசாக சிரித்துக் கொண்டே ‘ஓகே மச்சி லேட்டாயிடுச்சு. அப்படியே கெளம்புறோம், நீ அவசியம் முந்தின நாள் நைட்டே வந்துடணும்.’
“ஏன் கல்யாணத்தன்னி நைட்டுக்கு கூப்பிட்டு பக்கத்தில வச்சுக்க வேண்டியதுதான உன் ப்ரெண்டை?” இது அந்த கன்னடத்துக் கபோதியின் குரல்தான்.
‘சரிடா கண்டிப்பா வந்துடறேன். நீ கிளம்பு, கீழ் ரூம்ல கொஞ்சம் வேலயிருக்கு.’
‘கீழ் ரூமா? நீ first floor ல இருக்கடா.’
‘இல்ல இல்ல,கீழ் வீட்டுக்காரங்க வர சொன்னாங்க அத சொன்னேன். நீ கெளம்புடா.’
“நல்ல வேளை. அக்குள் புகழ் அனிதாவின் நிலைமை கவலைக்கிடமாகும் முன் கோபி வந்துவிட்டான்,” இது டிவியில் இலங்கை அறிவிப்பாளரின் குரல்.
தொடரும்
Read more...
உருவெளிச் சிதைவுகள் (2) - Adult content
‘ Ya, I love to watch all kind of movies ! கொஞ்சம் பொறுங்க, டீ எடுத்துட்டு வர்றேன்.’
வேகமாய் வந்து நிலவறை படியில் நின்றிருந்தவளை தள்ளி விட்டு, படாரென்று கதவை சாத்தினேன்।
Read more...
உருவெளிச் சிதைவுகள் (1) - Adult content
உள்ளிறங்கிப் பார்க்கும் நொடியில் இவர்கள் ஏறிவிடுவார்கள். தோளில் சாய்ந்து, கன்னத்தில் ஈஷி, மார்பில் படர்ந்து…
‘சட் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா? கைலியப் பிடுச்சு இழுக்கற.’
‘டேய் பாடு, நீதானடா சும்மா பஸ் ஸ்டாப்புல நின்னவள கூட்டிட்டு வந்த, இப்ப பெரிய ஒழுக்கக் கம்மனாட்டி மாதிரி பேசுற’.
‘அடியேய், அன்னைக்கு அந்தத் தெலுங்குப் பட பஸ் ஸ்டாப்புல நல்லா இங்கிலீஷ் பேசுனியேடி?’
‘அதி நேனு லேதண்டி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுடா புடுங்கி.’
‘ஹெக்கேக் ஹேக் கெக்கே ஹே gay…gay ஹெக்கேக் கேக்கெ..’
‘என்ன புரிஞ்சுதுன்னு இந்த மார் பெருத்த மலையாளத்தாளுக்கு இப்படி சிரிப்பு வேண்டியிருக்கு, இருடி மலபார் சிறுக்கி, அடுத்த ஞாயித்துக் கிழம வச்சுக்கறேன். பேரப் பாரு மலபாராம், வேற மாதிரி வச்சுருக்கணும். பொறுடி கொல்டி, கைலி ஈரமாயிடுச்சு, மாத்திட்டு வந்துடறேன். மலபார் கள்ளி, ஒரு சாயலுக்கு நீ அந்த மூணெழுத்து நடிகனோட முன்னாள் காதலி மாதிரியே இருக்கியே, எப்படி? சத்தியமா delusional impression இல்லடி.
தட் தட் தட், என்ன சத்தம் அது?
“கதவத் தட்றாங்கடா செவிட்டுக் …”
காவிரில தண்ணி விடுங்கன்னு தமிழ்நாடே கத்துறது கேக்காது, இந்தக் கன்னடத்து கபோதிக்கு…. அடச்சே, இந்தக் கன்னடத்துப் பைங்கிளிக்கு ரொம்ப பெருசு – காது. கரீக்டா சொல்ட்டாப்பா..!
‘இருய்யா வாரேன்.’ அடிங்கொ…தட்றத நிறுத்துங்கடா. இந்தப் பாழாய்ப்போன விருந்தாளிகள்…ஒரு நவ யுவன், கையில்லாத ரவிக்கை அணிந்த பெண் – நவ யுவதி?, ஏஜ்டு பெரிய மீசைக்கிழம். விருந்தோம்பல் தமிழனின் அணிகலன் என ஏதோவொரு சங்கப் புலவன் சொன்னதாய் ஞாபகம். மசுருங்க என்னத்தப் புடுங்குறதுக்கு இப்ப வர்றானுங்க.
‘சார், என்ன வேணும்?’
‘டேய் என்னடா? நாந்தாண்டா கோபி, இவ அனிதா (அயானா – னு வச்சுருக்கலாம்) என் colleague, அது அவளோட மாமா.’
அவளுக்கா இல்ல எல்லாருக்குமா? எனக் கேட்கத் தோன்றியதை நாக்கைக் கடித்து நிறுத்திக்கொண்டேன்.
‘என்னடா அப்படி பாக்குற? என்னை மறந்துட்டியா?’
‘இல்ல நீங்கள்லாம் உண்மையா. இல்ல பிம்பங்களானு பார்த்தேன்.’
“பொய் சொல்றான், அவனுக்கு schizophrenia + துரித ஸ்கலிதம்” - நிலவறையிலிருந்து கொல்டி ஹீரோயினின் குரல். இருடி வந்து உன்ன வச்சிக்கறேன். “முதல்ல கைலிய மாத்துறா பன்னாட.”
‘எனக்கும் அனிதாவோட அக்காவுக்கும் கல்யாணம், அதான் பத்திரிக்கை கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்.’
‘Oh, great.’
பெரிய மீசை டிவி ரிமோட்டை எடுத்து ON செய்தான். The room is on active depressive mode.
‘சரி நீ இவுங்களோட பேசிட்டு இரு, நான் அடுத்த தெருவுக்கு போய் ரவிக்கு இன்விடேசன் கொடுத்துட்டு வந்துடறேன்.’
Read more...
தசாவதாரம் - விமர்சனங்கள் - தேவை மீள்பார்வை
>> Monday, June 23, 2008
தசாவதாரம் படத்துக்கு போதும் போதுங்கிற அளவுக்கு நம்ம பதிவர்கள் விமர்............சனம்.............! எழுதி ஏற்கனவே துவைச்சு காயப்போட்டுட்டாங்க! இதுல நாம வேற எழுதி மக்கள்கிட்ட வாங்கிக் கட்டிக்கணுமான்னு ஒரே யோசனை. இவ்வளவுக்கும் நான் படம் பார்த்தது மூணாவது நாள்தான்,அது வரைக்கும் விமர்சனம் எதுவும் படிக்கலை. பார்த்துட்டு வந்து எதாவது கருத்து சொல்லலாமேன்னு தமிழ்மணத்தப் பார்த்தா டவுசர் கிழிஞ்சிடுச்சு [ sincere thanks to : லக்கிலுக் J ]. பார்ப்பன மலம்கிறாங்க, தலித்துக்கு பூ’வராகன்’ அப்படின்னு எப்படி பேர் வைக்கலாம்கிறாங்க, நுண்ணரசியல்கிறாங்க...இன்னொரு பக்கம் தசாவதாரம் உலகத்தரமா? இந்தியத்தரமா ?... “நடுவர் அவர்களே, உலக சினிமா என்பதற்கான வரையறை என்னவென்றால்...” அப்படிங்கற ரேஞ்சுல பெரிய பட்டிமன்றமே நடக்குது. தசாவதர விமர்சன சுட்டிகளுக்கே தனிப்பதிவுன்னு தாவு தீர்ந்துடுச்சு போங்க, அப்போ முடிவு பண்ணினேன் நாம எதுக்கும் படத்த ரெண்டாவதுவாட்டி பார்த்துட்டு கருத்து சொல்லலாமேன்னு. நேத்து பார்த்துட்டேன், இப்போ சொல்றேன்... படம் நல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு..!
படத்த பார்க்கப்போறதுக்கு முன்னாடி ஒரு விசயத்த நீங்க கண்டிப்பா மறந்துடணும் அது என்னன்னா கமல் பத்து வேசத்துல நடிச்சுருக்கார் அப்படிங்கறதைத்தான். (கஷ்டம்தான்,இருந்தாலும் முயற்சி செய்யுங்க ). ப்ளாங்கா உள்ள போய் உக்காந்திங்கன்னா ஒரு pure entertainer பார்த்த திருப்தி இருக்கும். அத விட்டுட்டு வண்டிக்கு டோக்கன் போட்றவர்ல ஆரம்பிச்சி கோன் ஐஸ் விக்கிறவர் வரைக்கும் இது கமலான்னு ஆராய்ச்சி பண்ணிங்கன்னா குழப்பம்தான் மிஞ்சும், படத்த follow பண்ண முடியாது.
இந்தப் படத்தை பொறுத்த வரை கமல் ஒரு நடிகனாக வெற்றி பெற்றதைவிட, நல்ல திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றுள்ளார் என்ற லக்கியின் கருத்தை நான் வழிமொழிகிறேன். மற்றபடி படத்தின் கேரக்டர்கள், கேயாஸ் தியரி, (இந்த தியரி இப்போது வரைக்கும் புரியாதவர்கள், அந்நியன் படத்தில் அம்பியின் அப்பா ஃப்ளாஷ்பேக்கில் அந்த குட்டிப்பெண் இறந்த பின்னர் கோர்ட்டில் வைக்கும் வாதங்களைக் கேட்கவும், ஒரு மரணத்தை புற உலகில் சமுதாயத்தின் மற்ற நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் அந்தக் காட்சி சாமான்யனுக்கும் புரியக்கூடும்) பாடல்கள்,ஒளிப்பதிவு,வசனங்கள், அசின் மற்றும் முக்கியமாக மல்லிகா ஷெராவத் பற்றி ஏற்கனவே தேவைக்கும் அதிகமாக பதிவர்கள் துவைத்து விட்டதால் நான் துவைப்பதற்கு ஒன்றுமில்லை.
.jpg)
ஆனால்,எனக்கு மிகவும் உருத்திய விஷயம் மேக்கப். பாதி கெட்டப்களுக்கு மேக்கப் சரியில்லை, கண்களை உறுத்துகிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ பிளாஸ்டிக் சர்ஜனிடமிருந்து அரைகுறை ஆப்பரேஷனில் தப்பி வந்த பேஷண்டை பார்க்கிற உணர்வு. என்னயக் கேட்டா கமல் சார், நீங்களே பத்து கேரக்டர்லயும் நடிச்சுருக்க வேண்டாம், அப்புறம் எப்படி தசாவதாரம்னு பேர் வைக்கமுடியும்னு கேக்கறிங்களா, அதுவும் சரிதான். வைச்சாச்சு, நடிச்சாச்சு. nothing to do, enjoy J. ரப்பர் முகமூடிகள மாட்டிக்கிட்டு உணர்ச்சிகளக் காட்ட முடியாததால் ஒவ்வொரு கெட்டப்பயும் பேச்சுலயும் உடல்மொழியிலயும் வித்தியாசப்படுத்தியிருக்கார். அதுலயும் அந்த ஜப்பானியனின் உடல் மொழி சிறந்த வெளிப்பாடு.
//பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது - பினாத்தல் சுரேஷ் // அப்படின்னு சொன்னத நிரூபிக்கிற மாதிரி படத்துல சில காட்சிகள் இருக்குது. சாம்பிளுக்கு ஒன்னு - புஷ் வரும் சீன்களில் என் முன்னால இருந்த நபர்கள் “என்ன ஜார்ஜ் புஷ் இப்படியா மடத்தனமா பேசுவார்? சும்மா சொல்றானுங்க.” என்றனர். Michael moore-ன் Fahrenheit 9/11 படத்த பார்த்தால் புஷ்ஷோட அறிவும், சாதனைகளும் எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியவரலாம். புஷ் பற்றி அமெரிக்காவுலய அந்த ஓட்டு ஓட்றாங்க நம்மள கண்டுக்கமாட்டாங்கன்னு கமல் நெனச்சுருப்பார் போல! பொதுவா தெரியிற ஒரு சில குறைகள தவிர்த்துட்டு பார்த்தால் ஒரு மேல்தட்டு ரசிகனுடைய பார்வைக்கு என்ன தேவையோ அது கிடைக்கிறது அதே நேரத்தில் ஒரு கடைக்கோடி ரசிகனுக்கு இப்படத்தில் என்ன புரியவேண்டுமோ அது நிச்சயம் புரிந்துவிடும்.
இந்தப் படத்துக்கு வந்த விமர்சனங்களக் காட்டிலும் விமர்சனங்களுக்கு வந்த பின்னூட்டங்களால்தான் பயங்கர சென்சேஷன் ! அதப்பத்தி கொஞ்சம் சொல்லலாம்ணு நெனைக்கிறேன். எல்லா விமர்சனங்களும் நேர்மையா எழுதப்பட்டிருக்கான்ன்னா இல்லைன்னுதான் சொல்லணும். சில பேர் படத்த மொக்கைனு லேபிள் குத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு எழுதியிருந்தாங்க, இத வழிமொழிஞ்சு நெறய பின்னூட்டங்களும் ! யாரும் சொல்ற அளவுக்கு இந்தப்படம் மொக்கயோ மொண்ணயோ அல்ல. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு தமிழன் (தமிழர்களில் திராவிடத் தமிழன், ஆர்யத்தமிழன்னு ரெண்டு பிரிவு இருக்கறதா நான் நெனக்கல..! ) தமிழ்ப்படங்களுக்கான சந்தையை உலக அளவுல திறக்க முயற்சி பண்றப்போ நாம உதவி செய்யலனாலும் உபத்திரவம் செய்யக்கூடாது. கனடாவில் இந்தப்படத்த வால்ட் டிஸ்னி வெளியிட்டதா ஒரு செய்தி படிச்சேன், எத்தன இந்தியப் படங்கள் இதைப்போன்ற அயல் நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கு? விரல் விட்டு எண்ணிடலாம். நண்பர்களே “சொல்லுதல் யார்க்கும் எளியவாம்” அப்படின்னு இனியாவது புரிஞ்சுக்கங்க.

Biological weapon- chasing, சப்பையான ஒரு வரிக்கதை, இதுக்கு இந்த பில்டப் அப்படிங்கற ரேஞ்சுல ஒரு fwd மெயில் வந்துச்சு, உங்கள்ள சில பேருக்கும் வந்திருக்கலாம். அந்த நண்பர்கிட்ட நான் கேட்கறது life is beautiful அப்படின்னு ஒரு படம்...செகண்ட் வேர்ல்ட் வார் டைம்ல ஒரு யூதக்குடும்பம் ஜெர்மன் சிறைக்கூடத்துல படற அவஸ்தைகள், ப்பூ இது ஒரு கதையா? அப்படின்னு சிம்பிளா மெயில் அனுப்புவீங்களா? சைக்கிள தொலச்சுட்டு வேலவெட்டி இல்லாம ஊரெல்லாம் தேடுறான்யா, bicycle thiefனு இத ஒரு படமா வேற எடுத்திருக்கானுங்கன்னு பேசுவீங்களா? ஏன் ஒரு தமிழன் உலக சந்தைக்கான ஒரு படத்தைக் கொடுத்ததுக்கு இப்படி கொலவெறி காட்றீங்க? (மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் தசாவதரத்தோடு ஒப்பீடு செய்யவில்லை,நான் கூற விழைவது அனைத்து திரைப்படங்களுக்கும் ‘one line story’ என்கிற ஒன்று உண்டு என்றுதான்)
ஒரு பதிவர் தன்னோட பதிவுல, ரங்கராஜ நம்பி ‘ஓம் நமோ நாராயணாய’ என்று கத்தும்போது Brave heart படத்துல Mel Gibson சுதந்திரம் அப்படின்னு கத்துறத ஞாபகப்படுத்துனதா எழுதிருக்காரு. அதனால இப்ப என்ன? கமல் அப்படி சொல்லக்கூடாதா? ஸ்காட்டிஷ் விடுதலை வீரனுக்கும் பிரிட்டிஷ் இராணுவத்துத்துக்கும் நடக்குற போராட்டத்துல கத்துனா மட்டுமில்ல, சைவ வைணவ போராட்டத்துல காட்டுனாலும் அது வீரம்தான், நண்பர்களே, அடக்குமுறை வெவ்வேற வடிவங்கள்ல இருக்கலாம் ஆனால் சுதந்திரம் எல்லாருக்கும் ஒன்னுதான். ஒத்ததிர்வுகள் கலையுலகத்துல எப்பவுமே இயற்கைதான், கமல் நடிப்பில் யாரையும் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை.
வேறொரு பதிவோட பின்னூட்டத்தில பத்து ஆங்கில படங்களப் பார்த்து எடுக்கப்பட்ட படம் அப்படிங்கற கமண்ட் ரொம்ப வருத்தப்படவச்சது, ஆனால் கடைசி வரைக்கும் அந்த நபர், பத்து படங்களோட பேர சொல்லவேயில்லை, சார், அந்த பத்து படங்கள் என்னென்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம். ஒரு வெகுசன படைப்பு பார்வைக்கு வரும்போது எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும்,வரணும். வந்தால்தான் சீர் தூக்கிப்பார்க்கும் தன்மையும் வளரும், எவ்வளோ குப்பையா படம் எடுத்தாலும் மக்கள் ஏத்துப்பாங்க அப்படிங்கற மோசமான நம்பிக்கையும் ஒழியும். ஆனா, கருத்து சொல்றவங்க யாரும் நானும் பேசுறேன் பேர்வழின்னு குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி பேசக்கூடாது. முடிஞ்சா ஆதாரங்கள எடுத்து வைங்க, நம்மளே கமல் சார்கிட்ட போய் உண்மையக் கேட்போம். என்னங்க, நான் சொல்றது சரிதான?
சமீபத்தில் ஒன்பது அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன் (இந்த வரி டோண்டு சார் பதில்கள் மாதிரி இல்லையே..?) த.மு.எ.ச கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் சொன்னார். கதை எழுதுவதற்கு 24 அல்லது 28 (எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை) story knots மட்டுமே உள்ளன, நாம் எத்தகைய படைப்பைக் கொண்டுவந்தாலும் அது இதற்குட்பட்ட கலவையாகத்தான் இருக்க முடியும் என்றார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நண்பர் கூறிய பத்து ஆங்கிலப்படங்கள் மட்டுமல்ல தசாவதரமும் இவற்றுக்குள் அடக்கம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டுமென்பதால்தான்.
கமல்கிட்ட இருந்து அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் மாதிரிதான் எதிர்பார்க்கிறதா நெறயப்பேரு கருத்து சொல்லிருந்தாங்க, நல்லது நானும் ஒத்துக்குறேன். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையே. அதுவும் தமிழ்நாட்டுலதான ரிலீஸ் ஆச்சு? கமல் சார் தொடர்ந்து கலைப்படமே கொடுத்துக்கிட்டு இருந்தா வடபழனில பொட்டிகடை வைச்சு உக்கார்ந்து ஸீன் பண்ண வேண்டியதுதான். கண்ணாடிப்பூக்கள், குட்டி, மல்லி திரைப்படங்கள் தரத்துல மேம்பட்டு இருந்ததா சொல்ற நாம அந்தப் படங்களுக்கு என்ன மரியாதை காட்டினோம்? பார்த்திபன் சார் “குடைக்குள் மழை”னு ஒரு படம் எடுத்தார். கிட்டத்தட்ட A beautiful mind மாதிரி, ஆனால் என்ன ஆச்சு? கலெக்சன் லெவெல்ல அந்தப் படம் பப்படம் ஆயிடுச்சு! தப்பு யார் மேல? அந்தப் படம் சரியில்லயா? இல்ல வழக்கமான சினிமாவுக்கு பழகுன நம்ம மூளை ஏத்துக்கலயா?
நேத்து விஜய் டிவி ல ஒளிபரப்பான மதன்ஸ் திரைப்பார்வைல K.S.ரவிக்குமார், யூகி சேது, மதன் மற்றும் பார்வையாளர்கள் கலந்துக்கிட்டாங்க, நெறயப்பேர் பாத்திருப்பீங்க. அதுல கவனிக்க வேண்டிய விசயம் ரவிக்குமார் சாரோட முகத்தைதான். ரொம்ப திருப்தியா, சிரிச்சுக்கிட்டே இருந்தார். இவ்ளோ பெரிய பட்ஜெட் படம் படுத்திருந்தா டைரக்டர் இப்படியா சிரிச்சுக்கிட்டு இருப்பாரு? படத்தோட ரிசல்ட் என்னங்கிறது அவர் முகத்துல தெரியுது. பேச்சின்போது யூகி சேது சொன்ன முக்கியமான பாய்ண்ட் - ‘ஆங்கிலம், இந்தி திரைப்படங்களுக்கான ஆடியன்சும், மார்க்கெட்டும் ரொம்ப பெருசு. ஆனா நாம ஆறு கோடி பேர மட்டுமே நம்பி படம் எடுக்கிறோம், ஹாலிவுட்ல எதாவது ஒரு உணர்ச்சிய மையப்படுத்தி எடுக்கப்படற படங்கள் ஒரே சுவை கொண்டது, ஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு ஒரே படத்துல நெறய சுவைகள் தேவைப்படுது, இது தலைவாழை விருந்து, தமிழ்நாட்டுல வேர்களை வச்சுக்கிட்டு உலக மார்க்கெட்டுக்கு எடுக்கப்பட்ட படம்’ அப்படின்னு சொன்னார். கரெக்ட்தான!

இன்றைய தேதியில் டெக்னிக்கலான முன்னேற்றத்துக்கு இந்தியாவில் தற்போதைய சிறந்த படம் தசாவதரம்தான். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வரக்கூடிய மாற்றங்களுக்கு இந்தப்படம் ஒரு விதை..! இப்படத்தோட வெற்றி பன்னாட்டு சினிமா கம்பெனிகளின் கவனத்தை தமிழ் படங்கள் மேல திருப்பும். தமிழ் சினிமா ஹாலிவுட் மாதிரி ஒரு கார்ப்பரேட் செக்டாராக மாறும். நிதி பெருத்த நிறுவனங்களின் வருகை புதிய முயற்சிகளுக்கான அடித்தளத்தை உண்டாக்குவது மட்டுமின்றி ஹாலிவுட் மாதிரி ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஸ்க்ரீன்ப்ளே மேக்கிங் போன்றவற்றை புதிய, தனிப்பட்ட துறைகளா மாற்றலாம். தொழில்நுட்பமும் படங்களின் பட்ஜெட்டும் வளரும் அதே நேரத்தில் நாம் நமது மண்ணையும், மக்களையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிற தரமான படங்களை கொடுப்பதின் மூலமாக ஈரானிய திரைப்படங்களைப்போல் தமிழ்ப் படங்களையும் உலக சந்தையில் நிலைநிறுத்தலாம்.
இந்தப்படம் முடிந்தவுடன் கமலுக்காகவும் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் நான் கைதட்டினேன். நீங்களும் தட்டுங்கள், அது கமல் போன்ற சிறந்த கலைஞனின் உழைப்புக்காக மட்டுமல்ல, எந்தவொரு கலைஞனும் விருதுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பது ரசிகர்களின் அங்கீகாரத்தைதான்..!
Read more...
2002-2008 டைரிக் குறிப்புகள்
>> Friday, May 30, 2008
ஒர் வேனிற்கால மதிய வேளை...
இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
எதிர்ப்படும் எல்லோருக்குமான புன்னகை இன்னும் மீதமிருக்கிறதா?
சடுதியில் மாறும் காட்சிகள் கொண்ட அறைக்கு வண்ணம் பூசியாயிற்றா?
பிடித்த நடிகை இன்னும் சிநேகாதானா?
சாப்பிடுவது அதே மேரி மெஸ்ஸில்தானே?
ரமணி சந்திரன் சிவசங்கரி படிக்கச் சொல்லி தோழிக்கு சிபாரிசு செய்கிறாயா?
கைகளை ஆட்டி அபிநயங்களோடு பேசுவதை நிறுத்தவில்லைதானே?
‘நெஞ்சமொருமுறை நீ என்றது’ பாடலை முணுமுணுக்கிறாயா?
டோனாபோலாவில் எடுத்த குரூப் ஃபோட்டோ சூட்கேசில் இருக்கிறதா?
.
.
.
இப்போது உயிரோடு இருக்கிறாயா?
*************
மின்சாரம் தடைப்பட்ட பின்னிரவில்...
புறக்கணிக்கப்பட்ட அன்பின் பொதிகளை
ஒரு குழந்தையென நீ சுமந்து திரிவதை
என்னால் தடுக்கமுடியவில்லை.
கைப்பையைத் திறக்கிறாய்...
விடியவே முடியாத இரவுகள்
வரிசைக்கிரமமாய் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றை எடுத்து உதறுகிறாய்
வானிலிருந்து சில நட்சத்திரங்கள் உதிர்வதை
காப்பாற்ற முடியவில்லை.
வாழ்வின் கசப்பான பக்கங்களை நத்தையின்
வேகத்தில் வாசிக்கத்துவங்கி
பெருங்குன்றொன்றின் மீதேறுகிறேன்
சமவெளிகளின் மகத்துவம் தெரியாமல்
என்னைக் காப்பாற்ற வருபவன் கல்லாய் சமையட்டும்.
*************
பருவமழை தொடங்க சில தினங்களே இருக்கும் இன்று...
மிதமிஞ்சிய குற்றவுணர்வுடன்
இதை எழுதிக்கொண்டிருப்பதாய் கூறுவது
நான் கொலையுறுவதற்கு சரியான காரணமாய் இருக்கக்கூடும்.
எனக்கு வாய்த்த சபிக்கப்பட்ட
வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
காயங்களைத் தராமலிருந்திருக்கலாம்
ஏமாற்றங்கள் அற்ற
துரோகங்கள் அற்ற
பாசாங்குகள் அற்ற
வஞ்சனைகள் அற்ற பெருவெளியில்
அன்பால் நிரம்பிய மேகம் ஒன்றை
இழுத்துச் செல்கிறது சிற்றெறும்பு
கார்காலம் தொடங்குமுன்
புற்றை நிரப்பிவிடும் பேராசையோடு.
Read more...
புலன்களில் விளைவது…
>> Tuesday, May 27, 2008
அரியதொரு தேநீர் கோப்பை ஒன்று
என் உணவு மேசையின் மீதிருந்தது
யார் வைத்தது என்றேன்
பதிலில்லை.
அதில் நீர் அருந்தினேன்,குறையவில்லை.
உணவு, மாமிசம், மது, பெண்…
நிரப்பிய எதுவுமே குறையவில்லை
பசி தாகம் போதை, காமம்
எதுவும் எனக்குத் தோன்றவில்லை.
கடவுளின் நான்காவது உலகினின்று
தவறி விழுந்த கோப்பை அது எனப்புரிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய்
நான் கல்லாகிக் கொண்டிருப்பதாய்
உடனிருப்பவர்கள் கூறினர்.
கோப்பையில் துளையிட்டால்
புலன்கள் வேலை செய்யும் என
சந்தித்த தேவதை கூறியது.
துளையிட்டேன்…மனிதனானேன்.
அன்றிலிருந்து கடவுளின்- துளையிட்ட
தேநீர் கோப்பையுடன் மட்டுமே நான்.
Read more...
நிலா நாள் வீடு
முற்றத்தில் பூனைக்குட்டிகளின் சத்தம்
ஒன்றன் மீது ஒன்று தாவி
பொய்யாய்க் கடித்து
ஓடி-நின்று–மறுகி-ஓடி
களியாட்டம்.
திரைச்சீலைகளை இழுத்துவிட்டு வந்து படுத்தேன்
என்ன பேசுவதென்று தெரியவில்லை
அருகில் படுத்திருக்கும் தனிமையை எழுப்பி.
Read more...