அந்திக்கு சற்று முன்பு
>> Thursday, June 18, 2009
வெக்கை மிகுந்த மதியத்தின்
நீண்ட வெயிலில்
சிறு பொறியென வெளிக்கிளம்புகிறது
உந்தன் மெல்லிய வேர்கள்
அறைக்குள் நுழைந்து
படர்ந்து பரவி
கிளர்ந்து
இறைச்சியின் கவிச்சியை முகர்ந்த
மிருகத்தின் வேட்கைகள்
அச்சிட்ட தாளோ
உலகோ
கடவுளோ மனமோ அகமோ
எப்போதும் போதுமானதாயில்லை.
இயங்குவதற்காய் இருந்து
இருத்தலுக்காய் இயங்கி
முடிக்கையில்
முதுகின் மையத்தில்
கோடென வழிந்து
கருகி விழும்
கருகி விழும்
ஒரு துளி பகல்.