குங்குமம்: நன்றி + ஒரு வேண்டுகோள்
>> Monday, July 13, 2009
நன்றி:குங்குமம்
குங்குமம் இதழில் என்னோட கவிதை வெளியாகியிருக்கு…! அதாகப்பட்டது, இந்த கவிதை இந்த வாரமோ அல்லது சென்ற வாரமோ வரவில்லை, ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்பு தேதியிட்ட (jun-24-jul-01)குங்குமத்தில் வந்தது. கவிதை வெளியிடப்பட்டிருப்பது எனக்கே தெரியாது. அலுவலகத்தில் சற்றே கிடைத்த ஓய்வில் இணையத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். தினத்தந்தி ஈ-பேப்பர் எர்ரர் மெஸேஜ் காட்டியதால் தினகரன் பக்கம் சென்றேன். அங்கிருந்த குங்குமம், வண்ணத்திரை மற்றும் தமிழ்முரசு லிங்குகளையும் சேர்த்து படித்துக்கொண்டிருந்தபோது பிரியாமணி பேட்டி வெளியாகியிருந்த குங்குமம் கவனத்தை ஈர்த்தது.(கவனிக்க- பேட்டி மட்டுமே, பிரியாமணி ஸ்டில் அல்ல ! ). ஈ-புக் படித்துக்கொண்டே வந்தால் 30-வது பக்கத்தில் blogspot.com பகுதி இருந்தது. 31வது பக்கத்தில் அந்திக்கு சற்றுமுன்பு என்கிற தலைப்பு கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த தலைப்பு மாதிரி இருக்கேன்னு பார்த்தா அது என்னோட கவிதைதான்…! எனக்கு அதிர்ச்சி + ஆச்சரியம் + ஆனந்தம்..! எனக்கு அதை குங்குமம் வெளியிட்டது குறித்து எந்த தகவலுமே தெரியாது, நான் அதை படிச்சது ஒரு விபத்து மாதிரி நடந்தது. கார்க்கியின் கதையொன்றும், கதிரின் நகைச்சுவை கதை
http://maaruthal.blogspot.com/2009/06/37-40.html - ஒன்றும் வெளியாகியிருந்தது.
கார்க்கி குங்குமத்திற்கு நன்றினு ஒரு பதிவு போட்ருக்கார். அவருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல.
http://www.karkibava.com/2009/06/blog-post_5282.html
அநேகமாய் கதிரும் என்னைப்போலவே உணர்ந்திருக்கக்கூடும். அவருக்கு இது சம்பந்தமா வந்த பின்னூட்டம் -
//
sakthi said...
இந்த கதை குங்குமம் வார இதழில் வெளி வந்ததில் மிக்க மகிழ்ச்சி...அருமையான நகைச்சுவை கதை
July 13, 2009 7:31 AM
கதிர் said...
குங்குமம் வார இதழிலா!!!???
July 13, 2009 8:49 AM
sakthi said...
என்ன சார் இப்படி கேட்டுடீங்க கார்க்கியின் பதிவு ஒன்று ராஜா சந்திரசேகரின் கவிதையொன்றுடன் இந்த பதிவும் வெளியாகியிருந்தது ஜீலை முதல் வார குங்குமம் இதழில் கிடைத்தால் வாங்கி படியுங்கள் சகோதரரே
July 13, 2009 10:15 PM
கதிர் said...
மிக்க நன்றி சக்தி
July 14, 2009 8:44 AM //
கதிருக்கு பின்னூட்டமிட்ட சக்திக்கு:
சக்தி, எனது பெயர் ராஜாசந்திரசேகர் அல்ல, r v chandrasekar/r v c, வாசித்தமைக்கும் அதை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றிகள்.
டியர் குங்குமம் டீம்,
என்னோட கவிதையை வெளியிட்டதற்கு நன்றி.
நீங்க எங்களைப் போல புதியவர்களோட படைப்புகளை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி. ஆனா இந்த மாதிரி உங்க பதிவை வெளியிட்டிருக்கோம்னு ஒரு மெயில் அனுப்பலாம் இல்லையா? மெயில் ஐடி எல்லார் ப்ரொஃபைல்லயும் இருக்கு. மெயில் அனுப்பறது ஒரு சிரமமான காரியமும் இல்லை. எல்லாரும் எல்லா இதழ்களும் படிக்கிறது இல்லை, நீங்க சொல்லாம விட்டுட்டீங்கன்னா, கடைசி வரைக்கும் பதிவர்களுக்கு தங்களோட படைப்பு ஒரு வெகுசன இதழில் வெளிவந்திருப்பது தெரியாமலே போக வாய்ப்பிருக்கு(என்னை மாதிரி..!). இனிமேல் மெயில் அனுப்புங்கப்பா..!
விகடன், குங்குமம், குமுதம் போன்ற வார இதழ்களில் ஏற்கனவே வெளிவந்த பதிவர்களுக்கு- உங்களுக்கு ஏதாவது அவங்ககிட்ட இருந்து மெயில் வந்ததா? இல்ல நாமதான் கண்டுபுடிச்சு வாங்கிபடிக்கணுமா?
ஏன் கேக்குறேன்னா, சென்னை முழுக்க அலைஞ்சும் அந்த குங்குமம் கிடைக்கல, கடைசில எங்க ஊர்ல சொல்லி வாங்கிவச்சிருக்கேன்!