கடற்கன்னி குறித்த கவிதை

>> Sunday, October 7, 2007

ஒரு யுகம் வேண்டும் உன்னைப் பின்தொடர…
இரவில் அலைகளின் மடியில் நீ விளையாடுவதை
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் கண்டபோது
அப்படித்தான் தோன்றியது எனக்கு…
எவரையும் எளிதில் வீழ்த்தும் கண்கள்
பாறையின் பின்னே நீ மறைகையில்
அலைகளில் தெரிந்தது
ஒரு மந்தகாசப் புன்னகையுடன்.
மேற்கே தீவுகளில் இருந்து வரும் நாவாய் மாலுமிகள்
இரகசியமாய் கிசுகிசுக்கின்றனர்
உன்னோடு சல்லாபிக்க ஆசைப்பட்ட ஒரு மாலுமி
மறுநாள் பிணமாய் மிதந்தானாம்.
கொற்கை துறைமுகத்தின் மதுவிடுதிகளில்
கிழவர்கள் உளறிக்கொண்டுள்ளனர்
உன்னைப்பற்றிய ஏதாவதொரு கதையை.
குறிப்பாய் கூந்தல் புரளும்
உன் மார்பின் பேரழகு குறித்த கதை.
ஆளற்ற தனித்தீவில் ஒதுங்கியிருக்கும் நான்
அது குறித்து பேசலாகாது, ஆனால்
என்னிடம் ஒரு பெருவலை உண்டு
நிச்சயமாய் ஒருநாள் வருவேன்
ஆமையின் முதுகிலேறி கடலின் அடியாழத்திற்கு
உன் தங்கநகரைத் தேடி...

4 comments:

Anonymous October 7, 2007 at 4:18 AM  

did you see that? really?
kannan

PRINCENRSAMA October 7, 2007 at 4:21 AM  

ஏம்ப்பு scuba diving-க்கு போறேன்கிறதத்தான் இப்படிச் சொல்றியலா? முடிஞ்சா நல்ல சீலா மீனாப் புடிச்சாங்க!

Jerald Wilson November 2, 2007 at 12:10 AM  

Very nice poem. And these two comments are showing that u made a big build up among ur friends. Anyway my hearty wishes to my beloved brother. Keep it up
Wilson

Joe April 29, 2010 at 10:50 PM  

அருமையான கவிதை!

நிலத்தில் வாழும் கன்னிகள் பத்தாதா? கடற்கன்னியை வேற ஏன் தொந்தரவு பண்றீங்க? விட்ருங்க பாவம்!

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP