மாறிலி

>> Saturday, February 25, 2012நிற்கும் ரயில்வண்டிக்குள்
பறந்து திரிகிறது சிட்டுக்குருவி
ரயில் நகர்கிறது
இப்போது
முழு ரயிலுக்கும்
ஒரே சிட்டுக்குருவிRead more...

தடம்

>> Sunday, February 19, 2012
வனத்திலிருந்து வெளியேறியது
கடைசி கொக்கு
உடலின் வெண்மையை மேகங்களுக்குத் தந்தது
அலகின் காவியை மண்ணிற்கு
கண்ணின் கருமையை தொலைவின் மலைகளுக்கு.
விடிகாலையில் வனம் முழுதும் குளமானது
குளம் இப்பொழுது பறக்கத் தொடங்கிற்று
நிசப்தமான மீன்களுடன்.Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP