சில எதிர்வினைகள்
>> Saturday, October 6, 2007
நீ தனியே செல்
நீ தவிர்க்கப்பட வேண்டியவள்
இது நீ வெளியேற வேண்டிய தருணம்.
வண்ணத்துபூச்சிகளின் பிரதிநிதியாய்
இனியும் உன்னை காட்டிக் கொள்ளவியலாது.
நானும் விடை பெறுகிறேன்,
அழிந்த நாகரிகத்தில் வாழும் உன் தலைநகரில்
என்னால் செய்யப்பட வேண்டிய
கடமைகள் சில மீதமிருக்கின்றன.
இந்நகரில் மழை நாளின் நினைவை புகைப்படமாக்குவது
எதிர் வீட்டுக் குழந்தைக்கு “அ”வை இடமிருந்து
வலமாக கற்றுக்கொடுப்பது
நான் சந்தித்த முதல் துரோகிக்கு மன்னிப்பு
ஒரு நல்ல கவிதைக்கான கடைசி முயற்சி
மற்றும் சில காதல்கள், இறுதியாய் ஒரு கொலை.
பிறகு நான் விடைபெறுவேன் பால்யத்திற்கு
அதுவரை இந்நகரம் பத்திரமாய் இயங்கட்டும்
கடல் கொள்ளாமல்.
நீ தவிர்க்கப்பட வேண்டியவள்
இது நீ வெளியேற வேண்டிய தருணம்.
வண்ணத்துபூச்சிகளின் பிரதிநிதியாய்
இனியும் உன்னை காட்டிக் கொள்ளவியலாது.
நானும் விடை பெறுகிறேன்,
அழிந்த நாகரிகத்தில் வாழும் உன் தலைநகரில்
என்னால் செய்யப்பட வேண்டிய
கடமைகள் சில மீதமிருக்கின்றன.
இந்நகரில் மழை நாளின் நினைவை புகைப்படமாக்குவது
எதிர் வீட்டுக் குழந்தைக்கு “அ”வை இடமிருந்து
வலமாக கற்றுக்கொடுப்பது
நான் சந்தித்த முதல் துரோகிக்கு மன்னிப்பு
ஒரு நல்ல கவிதைக்கான கடைசி முயற்சி
மற்றும் சில காதல்கள், இறுதியாய் ஒரு கொலை.
பிறகு நான் விடைபெறுவேன் பால்யத்திற்கு
அதுவரை இந்நகரம் பத்திரமாய் இயங்கட்டும்
கடல் கொள்ளாமல்.
4 comments:
காதல் தோல்வியா chandru?
yours-தாஸ்.....சின்னப்பதாஸ்
nice ::::::))))))))
sophy
எலேய்... பின்றியலே.... உங்களை இழுத்தாந்ததுக்கு நாங்களும் காலரைத் தூக்கிக்குறோம்லே!
இன்னொரு நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
அனுஜன்யா
Post a Comment