நிலா நாள் வீடு

>> Tuesday, May 27, 2008


பெளர்ணமி நிலா காய்கிறது
முற்றத்தில் பூனைக்குட்டிகளின் சத்தம்
ஒன்றன் மீது ஒன்று தாவி
பொய்யாய்க் கடித்து
ஓடி-நின்று–மறுகி-ஓடி
களியாட்டம்.
திரைச்சீலைகளை இழுத்துவிட்டு வந்து படுத்தேன்
என்ன பேசுவதென்று தெரியவில்லை
அருகில் படுத்திருக்கும் தனிமையை எழுப்பி.

8 comments:

sheela May 28, 2008 at 8:24 AM  

ayya purichiduchu :))

கென் May 29, 2008 at 10:24 PM  

"என்ன பேசுவதென்று தெரியவில்லை
அருகில் படுத்திருக்கும் தனிமையை எழுப்பி"

நல்லாயிருக்குங்க

RVC May 30, 2008 at 7:39 AM  

வருகைக்கு நன்றி கென்

அபிமன்யு May 30, 2008 at 8:31 AM  

// sheela said...
ayya purichiduchu :))//

எனக்கும் புரிஞ்சிடுச்சு:)

RVC May 31, 2008 at 7:26 AM  

abi unakku puriyathathu ethuvum irukka enna?

தமிழ்நதி July 8, 2008 at 10:29 AM  

தனிமை துக்கம்தான். எனினும், மனிதர்களைக் காட்டிலும் அது நன்றோ என்று பல சமயங்களில் தோன்றியிருக்கிறது. உங்கள் கவிதைகள் வழக்கமான குரல்களிலிருந்து மாறுபட்டுப் பேசும் தன்மை பிடித்திருக்கிறது.

RVC July 25, 2008 at 4:17 AM  

தமிழ்நதி,தங்கள் கூற்று உண்மையே . பல நேரங்களில் மனிதர்களைக் காணப்பிடிக்காமல் தனியே இயற்கையிடம் சரணடைந்த தருணங்கள் வாய்த்திருக்கின்றன. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி .

ரௌத்ரன் July 26, 2008 at 7:49 AM  

கவிதை அழகாக இருக்கிறது....

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP