புலன்களில் விளைவது…

>> Tuesday, May 27, 2008


காணக்கிடைக்காத வேலைப்பாடுகளுடன்
அரியதொரு தேநீர் கோப்பை ஒன்று
என் உணவு மேசையின் மீதிருந்தது
யார் வைத்தது என்றேன்
பதிலில்லை.
அதில் நீர் அருந்தினேன்,குறையவில்லை.
உணவு, மாமிசம், மது, பெண்…
நிரப்பிய எதுவுமே குறையவில்லை
பசி தாகம் போதை, காமம்
எதுவும் எனக்குத் தோன்றவில்லை.
கடவுளின் நான்காவது உலகினின்று
தவறி விழுந்த கோப்பை அது எனப்புரிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய்
நான் கல்லாகிக் கொண்டிருப்பதாய்
உடனிருப்பவர்கள் கூறினர்.
கோப்பையில் துளையிட்டால்
புலன்கள் வேலை செய்யும் என
சந்தித்த தேவதை கூறியது.
துளையிட்டேன்…மனிதனானேன்.
அன்றிலிருந்து கடவுளின்- துளையிட்ட
தேநீர் கோப்பையுடன் மட்டுமே நான்.

9 comments:

Unknown May 28, 2008 at 8:22 AM  

puriyala, ana nalla irukku.

Unknown May 28, 2008 at 8:22 AM  

puriyala,ana nala irukku

Ayyanar Viswanath May 28, 2008 at 9:35 AM  

மிக நன்று..

chandru / RVC May 29, 2008 at 7:25 AM  

thanks ayyanar.
sheela u the first one... :)
thankspa

சிறில் அலெக்ஸ் May 29, 2008 at 8:50 AM  

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி எடுக்கும் - வைரமுத்து

(அதைத்தானே சொல்றீங்க?)

நல்லாயிருந்துச்சு.

chandru / RVC May 30, 2008 at 3:53 AM  

thanx alex

ஜமாலன் August 24, 2008 at 2:05 AM  

இக்கவிதை ஜென் சிந்தனையை நினைவுட்டுகிறது.

கடவளின் படைப்பகளில் ஓட்டையின் முக்கியமானதானே..:)

வெறுமையைப்பற்றிய நல்லதொரு கவிதையாக உள்ளது.

chandru / RVC August 25, 2008 at 6:18 AM  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமாலன்.

Aruna September 3, 2008 at 1:12 AM  

ஐயோ உயிர் உறிஞ்சியது கவிதை.....அந்தக் கோப்பையாகவோ,அதைத் தவற விட்ட கடவுளாகவோ ,அந்த தேவதையாகவோ,அட அதுவும் இல்லையென்றால் அந்தக் கல்லாகிக் கொண்டிருக்கும் நானாகவோ இருக்கலாம் போலிருக்கிறது..
அன்புடன் அருணா

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP