அந்திக்கு சற்று முன்பு
>> Thursday, June 18, 2009
வெக்கை மிகுந்த மதியத்தின்
நீண்ட வெயிலில்
சிறு பொறியென வெளிக்கிளம்புகிறது
உந்தன் மெல்லிய வேர்கள்
அறைக்குள் நுழைந்து
படர்ந்து பரவி
கிளர்ந்து
இறைச்சியின் கவிச்சியை முகர்ந்த
மிருகத்தின் வேட்கைகள்
அச்சிட்ட தாளோ
உலகோ
கடவுளோ மனமோ அகமோ
எப்போதும் போதுமானதாயில்லை.
இயங்குவதற்காய் இருந்து
இருத்தலுக்காய் இயங்கி
முடிக்கையில்
முதுகின் மையத்தில்
கோடென வழிந்து
கருகி விழும்
கருகி விழும்
ஒரு துளி பகல்.
11 comments:
i like it
வாழ்த்துகள்
இக் கவிதை இன்னும் நல்லாப் புரியணும்னா எனக்கு நீங்க நிறைய அவகாசம் தரவேண்டியதா இருக்கே. :)
அருமையான கவிதை, இப்படித்தான் இருக்கிறது, என்ன செய்ய.
//அச்சிட்ட தாளோ
உலகோ
கடவுளோ மனமோ அகமோ எப்போதும் போதுமானதாயில்லை. இயங்குவதற்காய் இருந்து இருத்தலுக்காய் இயங்கி //
மிக அருமையான வரிகள்.
நீங்கள் நிறைய எழுத வேண்டுகிறேன்.
நன்றி மாயாதி, ராதாமணாளன்
நன்றி முத்துவேல். நீங்க அதிக நேரம் எடுத்துக்கற ஆள் இல்லயே!
:)
நல்ல கவிதை சந்துரு.
//அச்சிட்ட தாளோ
உலகோ
கடவுளோ மனமோ அகமோ எப்போதும் போதுமானதாயில்லை. இயங்குவதற்காய் இருந்து இருத்தலுக்காய் இயங்கி //
அருமை. இப்படித்தான் இருக்கிறது, என்ன செய்ய.
நீங்கள் வலைப்பக்கத்தில் நிறைய எழுத வேண்டுகிறேன்.
நன்றி யாத்ரா. :)
ஆர்விசி,
நீண்ட நாளைக்கு அப்புறம். ரொம்ப நல்லா இருக்கு கவிதை
//கோடென வழிந்து
கருகி விழும் ஒரு துளி பகல்.//
AC மாட்டிகீங்க சரியாடும். :)
joke apart
வித்தியாசமா இருக்கு. நிறைய எழுங்கப்பா
நல்லா வந்திருக்கு சந்திரா. ஏன் இவ்வளவு இடைவெளி? ஆணி அதிகம் என்கிற பல்லவி எல்லாம் வேணாம் :)
அனுஜன்யா
Migavum azhuthamaaga eluthirukkireerkal... een migapperiya idaiveliyil eluthukereerkal ??
Thodarnthu eluthunkal nanba..
Vaalthukkalum & Nanriym
Post a Comment