பறவையைக் கண்டுணர்தல்

>> Thursday, January 22, 2009


அலைவுகளுக்குப் பின்னால்
தணிவு கொண்ட நதிபோல் இருக்கிறேன்
சிறுமி எறிந்த கூழாங்கல்லென
விழுந்து தளும்புகிறாய் என்னுள்
வட்டவட்டமாய்
கிளர்ந்து பரவுகின்றன
காதலின் பெருங்கரங்கள்.
மரத்திலிருந்து மீன் பார்க்கிறது
ஆழத்தில் நீந்தும் மீன்கொத்தியை.
மிதக்கும் தக்கையின் ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது காலத்தின் நிசப்தம்.
உற்றுநோக்கும் கடவுளின் கண்களை விலக்கி
நிறுத்திவிடவேண்டும்
அதிர்வுகளோடு பரவும் பேரலைகளை,
முடிந்தால்
பெருங்கடல்களில் கலக்கும் நதிகளை.

* அய்யனாரின் அடர்நீலத்தீற்றல் கொண்ட பறவைக்கு

16 comments:

புதியவன் January 23, 2009 at 2:40 AM  

//சிறுமி எறிந்த கூழாங்கல்லென
விழுந்து தளும்புகிறாய் என்னுள்//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
கவிதை அழகு...வாழ்த்துகள் சந்த்ரசேகர்...

Saravana Kumar MSK January 24, 2009 at 9:36 AM  

ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க..

Saravana Kumar MSK January 24, 2009 at 9:36 AM  

//மரத்திலிருந்து மீன் பார்க்கிறது
ஆழத்தில் நீந்தும் மீன்கொத்தியை.
மிதக்கும் தக்கையின் ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது காலத்தின் நிசப்தம்.//

அட்டகாசம்..

Saravana Kumar MSK January 24, 2009 at 9:36 AM  

அழகா இருக்கு கவிதை..

RVC January 25, 2009 at 7:24 AM  

நன்றி புதியவன்

RVC January 25, 2009 at 7:28 AM  

ஆம் சரா, பதிவிட்டு நீண்ட நாட்கள் ஆயிற்று. அவ்வப்போது இணையம் வந்தால் உங்கள் பதிவுகளை வாசித்துக்கொண்டுதான் உள்ளேன். //அழகா இருக்கு கவிதை//
நன்றி

சென்ஷி January 25, 2009 at 7:49 AM  

கவிதை அருமை நண்பரே..!

மதன் January 25, 2009 at 8:03 AM  

கவிதை நன்று நண்பரே..!

கவிநயா January 25, 2009 at 8:10 AM  

கவிதை வெகு அழகு.

RVC January 26, 2009 at 6:03 AM  

நன்றி சென்ஷி..!

மின்னல் January 28, 2009 at 10:51 PM  

நல்ல மொழி ஆர்விசி.

குறிப்பிட்டு சொல்லனும் என்றால் எல்லா வரிகளையும் highlight பண்ணனும்.

//மிதக்கும் தக்கையின் ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது காலத்தின் நிசப்தம்.//

வாவ் சூப்பர் சிந்தனை...


ஆனா தலைப்பு புரியலை.

அனுஜன்யா February 1, 2009 at 6:11 AM  

/மரத்திலிருந்து மீன் பார்க்கிறது
ஆழத்தில் நீந்தும் மீன்கொத்தியை.//

மாஜிகல் ரியலிசம்! கலக்குறீங்க சந்திரா. அப்பப்போ ஏன் நீண்ட இடைவேளை. Not accepted

அனுஜன்யா

RVC February 1, 2009 at 11:34 PM  

மதன், கவிநயா, மின்னல் - நன்றி

RVC February 1, 2009 at 11:42 PM  

அனு, நன்றி :)

Suresh March 3, 2009 at 1:13 AM  

vithiyasamana pathivu thalaiva

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-)

Kandipa ungaluku pidikum endru nambugiran.

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?

அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,

உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

முபாரக் March 31, 2009 at 11:14 PM  

நலமாக இருக்கிறீர்களா நண்பரே!

அற்புதமான படிமங்கள், ரொம்ப நல்லாருக்கு.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP