அகழ்வின் குறிப்பிலிருந்து*
>> Monday, October 12, 2009
புனல் மிதக்கும் நாவாய்கள்
கரையெங்கும் மலர்ந்து நிற்கும்
பஃறுளி ஆற்றின் முகத்துவாரத்தில்
பாய்விரித்து கடல் ஏகிய
தலைவனின் இறுதி நிமிடங்களில்
விரிகிறது கடல்கொள்ளும் கபாடபுரம்
புன்னைக்கு பால் ஊற்றும் தலைவி
தோழிக்கு சொல்லும் கூற்றில்
அலைகள் உறங்கும் கடலிலிருந்து
பசலையும் பெருவிளிப்புகளும்
கலந்தகுரலில் யாழ் ஒன்று
தனிமொழியில் பேசுகிறது
யுகம் யுகமாய்
உப்பின் கரிப்புடைய இசையை
குளிர்சாதனப்பெட்டியில் இருந்து
சமைக்க எடுத்த மீனில்
ஒட்டி இருந்த நரம்பை மீட்டினேன்
வீட்டினுள் அலையடிக்க
விரிந்து பரந்தது கடல்.
* இந்த கவிதை இம்மாத அகநாழிகை இதழில் வெளிவந்துள்ளது
8 comments:
சந்திரா,
ஏற்கெனவே படித்து, சொன்னதுதான். ரொம்ப நல்லா இருக்கு.
And welcome back.
அனுஜன்யா
காலம் மீட்டப்பட்ட மெல்லிய நரம்பொன்றின் வழியே தன் நிகழில் தன் இறந்தகாலத்தையே நிரப்பலாம்..
நுட்பமான கவிதை சந்துரு..
அரியலூர் அகழ்வில்
டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட
வேளையில் வருகிறது
குளிர் சாதனப் பெட்டியிலிருந்து
யாழ் புதைந்த கடலின்
உப்புக் கரிப்பு தோய்ந்த
மீன் சமைத்த இக்கவிதை.
என் தாய்த் தமிழ்ச் சமூகம்
இன்றைக்கு வதை முகாமில் வாழ்ந்தாலும்,
"எங்க பாட்டன் குதிரை ஓட்டியவன்; பார் என் குண்டி காய்த்திருக்கிறது" என்ற அளவிற்கல்லாது,
அது போல்
ஒரு குதிரை ஓட்டப்
பழகுவதற்கான
முனைப்பை உண்டாக்கினால் மகிழ்வே.
ஆனால், இக்கவிதையில் இருக்கும் உணர்வு பெருமையானதல்ல...
நரம்புகளைக் கிழிக்கும்
முள்வேலிக்குள்
இருந்த படி
யாழில் சோக கீதம் மட்டுமே
கோர்க்க முடியும் இற்றை நாளில்!
மீட்டிய நரம்புகளில் விரிந்த கடல்
நீட்டிய துப்பாக்கிக்கு பலியான எம் பரதவரின் துயரக் காட்சியாகவே விரிகிறது...
கடலின் பேரிரைச்சலை விஞ்சும்
ஒலங்கள் எம் கரையில்
கேட்கின்றன....
நன்றி அனு.
முன்பே சொல்லியிருந்தது போல எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது சந்துரு. வாழ்த்துகள்.
//குளிர்சாதனப்பெட்டியில் இருந்துசமைக்க எடுத்த மீனில் ஒட்டி இருந்த நரம்பை மீட்டினேன்வீட்டினுள் அலையடிக்கவிரிந்து பரந்தது கடல்//
என்ன ஒரு கற்பனை? அழகாக அருமையா இருக்கு கவிதை ஆர்.வி.சி. நிறைய எழுதுங்களேன்.
அபிமன்யு, நீ பிரின்சுக்கு பதில் சொன்னா நல்லாருக்கும்..!
off the record நீ stereotypicனு சொன்னதையும் எடுத்துக்குறேன். :)
யாத்ரா, லாவண்யா... அன்பிற்கு நன்றிகள்
Post a Comment