அணில் கதை
>> Friday, November 27, 2009
ஒன்றிலிருந்து ஒன்றாக
கண்ணிகளின் மீது
தாவுகிறது அணில்
நீண்ட புசுபுசு வாலுடன்
அழகாய் இருகரம் குவித்து
நின்று... ஓடி...
வானம் பொய்த்துப்போன
நாட்களை சபித்து
இரைதேடி நகர்புகும்
நெல்மணி தொடங்கி
பழங்கள் வரை தேடும்.
ஒன்றும் கிடைக்காத வெறுமையில்
நெளிந்த கோக் டின்னை
ரட்டரட்ட ர்ர்ர்ரட்டவென
உருட்டி விளையாடும்
தொடர்தேடல்கள்
அயர்ச்சியூட்டும்போது
காட்டில் - பொந்தில்
கீச்கீச்சென்றிருக்கும்
பிங்க் நிறக்குட்டிகளை
நினைத்துக்கொள்ளும்
இறுதியாய் கிடைத்ததை
சேகரித்துக்கொண்டு
மாலையில் திரும்பும்.
கண்ணிகளைத் தாண்டி
எல்லை தொடுகையில்
சுடப்பட்டு செத்துவிழும்.
*எழுதியது-2006ல். பதிவிட்டது - இன்று
8 comments:
நெய்தல்??
புது பெயர் யோசிக்கிறீர்களோ!!
படிக்கும் பொழுது.. அணிலின் புசுபுசு வாலும், துறுதுறு செய்கைகளும் கண் முன்னே மின்னி மறைகிறது.
// வானம் பொய்த்துப்போன
நாட்களை சபித்து
ம்.. அணிலுக்கும் உண்மை நிலவரம் தெரிந்திருக்கிறது. :(
ரொம்ப நல்லா இருக்கு சந்துரு.
பெயரற்ற தளம் ? :)
படம் வெற்றியடைய கதாநாயகனை கொல்லும் திரைக்கதையை போல அணிலை கொன்றுவிட்டீர்களே ஆர்விசி
நெய்தல் நல்ல பெயர் தானே?
நன்றி தினேஷ்.
நன்றி யாத்ரா, அடையாளம் தேவையில்லைனு சொல்லி தப்பிச்சுடலாமா ?! :)
நன்றி லாவண்யா. அணில் 2006-லேயே சுடப்பட்ருச்சு, இப்போ கோவப்படாதீங்க..!
நெய்தல்- வாழ்க்கை இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆக இருப்பதால் மாத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன் :)
அணிலின் கதை நன்றாகவே வந்திருக்கிறது நண்பா..2006-2009 நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் கவிதை பொருந்தியே போகிறது..
நல்லா இருக்கு சந்திரா.
அனுஜன்யா
Post a Comment