தடம்

>> Sunday, February 19, 2012
வனத்திலிருந்து வெளியேறியது
கடைசி கொக்கு
உடலின் வெண்மையை மேகங்களுக்குத் தந்தது
அலகின் காவியை மண்ணிற்கு
கண்ணின் கருமையை தொலைவின் மலைகளுக்கு.
விடிகாலையில் வனம் முழுதும் குளமானது
குளம் இப்பொழுது பறக்கத் தொடங்கிற்று
நிசப்தமான மீன்களுடன்.

2 comments:

ஸ்ரீ March 24, 2012 at 11:35 PM  

ம்ம்...:-))))

PRINCENRSAMA May 12, 2012 at 11:06 AM  

ஒரு கவிதையை தமிழுக்குத் தந்தது என்பதையும் சேர்த்துக் கொள் நண்பா!

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP