நிறப்பிரிகை

>> Tuesday, August 28, 2007


பனி படர்ந்த இக்காலைவேளையில்
ஊருக்கு வெளியே
நெடுஞ்சாலையில் நடப்பது
இதமாய் இருக்கிறது.
ஆத்ம சிநேகிதனைப் போல்
கூட வரும் காற்று
சாலையில் இருமருங்கிலுமுள்ள
கொன்றை மரங்களை அசைக்கையில்
இருந்த ஒன்றிரண்டு பூக்களும் உதிர்கின்றன.
ஒரு பூவைக் கையிலெடுக்கையில்
அது பூவாய் இல்லை
நிறமாய் இருக்கிறது.
மஞ்சள் காவி வெளிர் மஞ்சள்
நிறமற்றுப் போனபோது வெண்மை.
கடைசி முத்தத்தின் போது உதிர்ந்த மல்லி
என் ஆய்வுக்குறிப்பேட்டினுள்
காவியை எட்டியிருக்கிறது
இருத்தலின் நிறம் கருமை
பிரிவின் நிறம் காவி.

4 comments:

Anonymous October 6, 2007 at 7:26 AM  

அனைத்து கவிதைகளும் நன்றாக வந்துள்ளன. அடிக்கடி எழுதுங்கள் RVC
batsha,
india

PRINCENRSAMA October 6, 2007 at 9:18 AM  

எலேய் இந்தக் கொன்றை மரங்களை எங்க பார்த்த...
நானெல்லாம் படிச்சதோட சரி....

anujanya June 25, 2008 at 11:19 PM  

அருமை. நான் 'இன்மையின்' நிறம் கருமை எனக் கொண்டிருந்தேன். பிரிவின் நிறம் காவி நிறைய அசைபோட வைத்தது.

அனுஜன்யா

chandru / RVC June 26, 2008 at 12:28 AM  

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி அனுஜன்யா.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP