தெளிவானதொரு பிரக்ஞையற்ற
சூழலில் இந்த அறையிருக்கிறது
அறைக்குள் நான் வசிக்கிறேன்
சிந்தனை, சுய எள்ளல்,
நினைவு தப்புதல், நீளும் பகல் தனிமைகள்,
சுயமைதுனம், போதை-
பெருகும் ஆற்றாமைகளின் பட்டியல்
அறைக்கு வெளியே இருப்பவர்கள்
குறித்து எதுவும் எனக்கு தெரியாது
இரவைக் கடக்க தேவை எட்டு மணி நேர மரணம்.
8 comments:
நீங்களுமா???!!!!
பின்னீட்டீங்க தலைவா..
சந்திரா,
'தேவை எட்டு மணிநேர மரணம்' - தனிமையின் கொடுமையை விவரிக்கும் வரிகள். இது எல்லாம் சும்மா கவிதைக்கு தானே? நல்லா இருக்கு.
அனுஜன்யா
//நீங்களுமா???!!!!//
சரா, யூ டூ புரூட்டஸ் மாதிரில இருக்கு :)
நிச்சயமா கவிதைக்குதான் அனு. இயல்பில் முடியாததால்தான் கவிதைங்கிற பேர்ல தலைமறைவாகுறது. :)
நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும். கடைசி வரி பிடித்திருக்கிறது.
//சரா, யூ டூ புரூட்டஸ் மாதிரில இருக்கு :)//
அப்படியிலீங்க்னா.. நீங்களும் என் இனமா?? என்று கேட்கிறேன்..
'இரவைக் கடக்க தேவை எட்டு மணி நேர மரணம்'.
வலிகள் சுமந்த வரி.. ரொம்ப நல்லா இருக்கு..!! :)
'தேவை எட்டு மணிநேர மரணம்' -
சலனமடைந்த நெஞ்சின் வரிகள்
வாசகனையும் சலனப்படுத்துகிறது.
அதுதானே கவிதை!
Post a Comment