மற்றுமொரு நாள்...

>> Sunday, September 14, 2008


எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
அழகான எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.

8 comments:

MSK / Saravana September 14, 2008 at 6:51 AM  

கலக்கல்.. அருமையான கவிதை..

ஜ்யோவ்ராம் சுந்தர் September 14, 2008 at 8:37 AM  

கவிதை நன்றாக வந்திருக்கிறது.

anujanya September 14, 2008 at 11:07 PM  

சந்திரா,

அருமை.

//டேர் டு டச் டி-சர்ட்டுகள்//
//குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…//

பிரமாதம். இதைத் தான் 'ஏன் அதிகம் எழுதுவதில்லை' என்றேன்.

வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

chandru / RVC September 15, 2008 at 12:54 AM  

நன்றி சரா

chandru / RVC September 15, 2008 at 12:55 AM  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர் சார்.

chandru / RVC September 15, 2008 at 9:08 PM  

இனி எப்படியாகிலும் தொடர்ந்து எழுத வேண்டுமென இருக்கிறேன் அனு. அன்பிற்கு நன்றி.

Unknown September 15, 2008 at 11:09 PM  

வாவ் நல்லா இருக்கு..!! :))

முபாரக் November 25, 2008 at 3:40 AM  

நல்லா வந்திருக்கு கவிதை. வாழ்துகள்

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP