கவிதையை செய்தல்

>> Sunday, September 14, 2008


எழுதிவிடமுடியா ஒரு கவிதையென

நீ வார்க்கப்பட்டிருக்கிறாய்.

இருப்பதில் பெரும் சொற்களஞ்சியமென

அறியப்படுவதன் துணைகொண்டு

உனை வாசிக்க முயல்கிறேன்

துகள்களாய் சிதற்வுறுகிறதுன் உடல்

எதனுள்ளும் சிக்காமல்

நழுவத்தொடங்குகின்றன சொற்கள்

பத்திகளாய்

வாக்கியங்களாய்

வார்த்தைகளாய்

எழுத்துகளாய்

………….

வெறுமை சூல்கொண்ட கணத்தில்

எழுதத்தொடங்கினேன்

முற்றுப்புள்ளியிலா பெருங்காப்பியத்தை

ஒரே கவிதையென தலைப்பிட்டு.

12 comments:

அனுஜன்யா September 14, 2008 at 11:10 PM  

சந்திரா,

நன்று. நீண்ட நாட்களுக்குப்பின் ஓய்வா? ஒரே நாளில் மூன்று கவிதைகள்!

அனுஜன்யா

Saravana Kumar MSK September 15, 2008 at 9:34 AM  

கலக்கீடீங்க்னா..
:))

RVC September 15, 2008 at 9:10 PM  

நன்றி சரா. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன், பாருங்கள்.

RVC September 15, 2008 at 9:11 PM  

aam anu, innum iraNdu waatkaL ooyvuthaan.

ஸ்ரீமதி September 15, 2008 at 11:10 PM  

Romba nalla irukku

RVC September 17, 2008 at 7:05 AM  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீமதி.

RVC September 18, 2008 at 12:19 AM  
This comment has been removed by the author.
Anonymous September 19, 2008 at 1:39 AM  

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

gayathri November 16, 2008 at 9:55 PM  

kavithai nalla iruku pa

gayathri November 16, 2008 at 9:56 PM  

kavithai nalla iruku pa

logu.. December 27, 2008 at 2:46 AM  

nallarukkunga..

Saravana Kumar MSK January 1, 2009 at 4:08 AM  

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP