கவிதையை செய்தல்
>> Sunday, September 14, 2008
Read more...
தெளிவானதொரு பிரக்ஞையற்ற
சூழலில் இந்த அறையிருக்கிறது
அறைக்குள் நான் வசிக்கிறேன்
சிந்தனை, சுய எள்ளல்,
நினைவு தப்புதல், நீளும் பகல் தனிமைகள்,
சுயமைதுனம், போதை-
பெருகும் ஆற்றாமைகளின் பட்டியல்
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
அழகான எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.
© Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008
Back to TOP