விசைச்சுருள்
>> Friday, February 25, 2011

கனவுகளின் நிர்தாட்சண்யமான பள்ளத்தாக்குள்
மரப்பாச்சி பொம்மையைத் தேடி
விழுந்துவிட்ட சிறுமியின் கனவு
மரப்பாச்சி பொம்மை
கருங்காலி
பொம்மை மரப்பாச்சி
கண்ணி வெடியின் லாவண்யம் சொட்டும்
பொம்மையில் இருக்கக்கூடும்
எழுப்பப்படாத கடவுளர்களின்
லிங்க நிதம்ப சூத்திரங்கள் குறித்த
பள்ளத்தாக்கின் ஒரே நிர்தாட்சண்யமான உங்கள் கனவும்
சிறுமியும் நீங்களும் கனவும்
கனவும் மரப்பாச்சியும் சிறுமியும்
நீங்களும் கனவும் மரப்பாச்சியும்
வேறுவேறல்ல என்றும் நீங்கள் இதை வாசிக்கலாம்.

1 comments:
நல்ல கவிதை ஆனா இன்னும் கொஞ்சம் செரிவாக்கலாமென தோணுது சந்துரு.
Post a Comment