வாழ்வை ஊடுருவி….
>> Saturday, July 14, 2007
அவனுக்கு என்னவாயிற்று?
அவனுக்கு சரியாய் நினைவில் இல்லை
நேற்றுதான் நிகழ்ந்தன யாவும்
என்பதாய் நினைப்பு அவனுக்கு
அவனை பாதித்த ஏதோ ஒன்று…
உண்மையில் நேற்றேதான் நிகழ்ந்திருக்குமோ?
எதிர்படும் எவரிடமும் மன்னிப்பு கேட்கும் அவனை
அயர்ந்தோய்ந்த பெருநகரின் இரவு தெருக்களில்
நீங்கள் சந்தித்திருக்கக்கூடும்.
அவனது மன்னிப்பிற்கான இரைஞ்சலை
யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை
மறுதலிக்கவும் இல்லை.
யாரும் அற்ற இராப்பொழுதில்
மரணத்தை அவன் துரத்துவதை
நான் எதிரில் நின்று பார்த்தேன்.
அதை அவன் உணர்ந்திருக்கக்கூடும்-
மெளனமாய் என்னை கடந்து சென்றான்
என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது
எனக்கு சொல்ல அவனிடம் சேதி இல்லை.
விசாலமான பறவையின் கூடொன்று
அவனது வருகையை எதிர்பார்த்திருக்கிறது-இன்னும்
அவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறான்
காலத்தின் வேர்களை இறுகப் பற்றியபடி.
1 comments:
simply superb.
//யாரும் அற்ற இராப்பொழுதில்
மரணத்தை அவன் துரத்துவதை
நான் எதிரில் நின்று பார்த்தேன்.
அதை அவன் உணர்ந்திருக்கக்கூடும்-
மெளனமாய் என்னை கடந்து சென்றான்
என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது எனக்கு சொல்ல அவனிடம் சேதி இல்லை.//
Post a Comment