உருவெளிச் சிதைவுகள் (2) - Adult content

>> Friday, July 25, 2008‘என்ன சார், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்னு நெறய dvd s கெடக்கு எல்லா மொழி படமும் பாப்பிங்களா?’

“ஆமா அவுரு தேசிய ஒருமைப்பாட்டை பேணி வளக்குறாரு. உன் மீசையில தீய வைக்க, பொத்திக்கிட்டு டிவியப் பாருடா !” சுவரில் ஒட்டியிருந்த ராய் நடிகையின் படம் காற்றில் படபடத்தது.

‘ Ya, I love to watch all kind of movies ! கொஞ்சம் பொறுங்க, டீ எடுத்துட்டு வர்றேன்.’

வேகமாய் வந்து நிலவறை படியில் நின்றிருந்தவளை தள்ளி விட்டு, படாரென்று கதவை சாத்தினேன்।
‘என்ன சார், தரையிலே என்ன பார்த்துட்டிருக்கீங்க?’
‘ஒன்னுமில்ல, சும்மா லேசா வழுக்குன மாதிரி இருந்தது. நீங்க ஹால்ல இருங்க வந்துடறேன் ’

இவர்களுக்கு தேநீர் கலக்கிக் கொடுத்து நல்ல நாள் பிஸ்கட் தின்னக் கொடுத்து உபசரிக்கையில் அந்த கையில்லாத ரவிக்கைக்காரி
‘if you don’t mind, will you please show me the toilet’ என்றாள் லேசர் செய்யப்பட்ட அக்குளைக் காட்டிக் கொண்டே.
‘ya with pleasure anitha'

“கக்கூஸைக் காட்டுறதுல உனக்கு என்னடா pleasure ?!” மீண்டும் ராய்.
Anitha...anithaa...thaa… தா... honey தா... கனி தா… வெகு அருகில் அனிதா!
“Anitha you are having beautiful pair of hands…they are looking very soft… smooth… silky… tender…” அனிதா சிரித்துக் கொண்டே Katrina kaif போல இருவிரல்களைக் காட்டிவிட்டு கதவில் பதித்திருந்த கண்ணாடியைப் பார்த்து இரண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தபின் ‘excuse me’ சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… என்னே, அக்குள்களின் வழவழப்பான திவ்ய தரிசனம் ! த்ரிஷா முன்னே வந்து ஆடத்தொடங்கியிருந்தாள். “மொழ மொழன்னு யம்மா யம்மா, மொழ மொழன்னு…” ஓ கடவுளே… இந்த இழவெடுத்த பிம்பங்கள் … நிலவறைக் கதவு சாத்திதானேயிருக்கிறது, அப்பாடா, நிம்மதி. பின்னே இது மட்டும் எப்படி வெளியே?

இந்த பிம்பத்தை எப்படியாவது நிலவறைக்குள் தள்ளிவிட வேண்டும், அதுவும் அந்த பெரிய மீசைக்காரனுக்கு தெரியாமல். நான் அனிதாவின் அக்குளை பே என்று பார்த்துக்கொண்டிருந்ததை அவன் பார்த்திருப்பானா?
“அவன் என்ன gay யா, உன்னை பே என்று பார்ப்பதற்கு”- நிலவறைக் குரல்கள்.
சே, இருக்காது, அப்போது அவன் நல்ல நாள் பிஸ்கெட்டுகளை மீசை மயிர்கள் வழியாக துகள்களாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் வரும் வழியில் அவன் அனிதாவின் அக்குளை நெருக்கமாகப் பார்த்துக் கொண்டோ அல்லது முகர்ந்து கொண்டோ கூட வந்திருக்கலாம்.
“இது உனக்கு தேவையா? அடுத்தவன் மு…. மூ…தைப் பற்றி உனக்கென்ன கவலை?” மீண்டும் நிலவறைக் குரல்கள்.
தொடரும்...

6 comments:

sheela July 25, 2008 at 7:47 AM  

படம் வித்யாசமா இருக்கு. கதையும்தான் :)

RVC July 25, 2008 at 8:12 AM  

கொஞ்சம் மசாலா கலந்து இன்னும் 2 பார்ட் வரும்.
வித்தியாசமா இருக்கா? அது சரி. வந்ததுக்கு வணக்கமுங்கோவ் !

TBCD July 25, 2008 at 8:41 AM  

என்னவோ போங்க....தொடர்ந்து படிக்க்கனும் என்று தான் தோனுது..

எழுதுங்க..படிக்கிறோம்..

RVC July 26, 2008 at 1:43 AM  

tbcd சார், ஆர்வத்துக்கு நன்றி.

RVC July 26, 2008 at 11:15 PM  

tbcd சார், கதையை பத்தி ஒண்ணும் சொல்லாம சிரிச்சுக்கிட்டு இருந்தா எப்படி?

அபிமன்யு July 29, 2008 at 11:56 PM  

//‘if you don’t mind, will you please show me the toilet’ என்றாள் லேசர் செய்யப்பட்ட அக்குளைக் காட்டிக் கொண்டே.
‘ya with pleasure anitha'


“கக்கூஸைக் காட்டுறதுல உனக்கு என்னடா pleasure ?!” மீண்டும் ராய்.//

என்ன சார், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்னு நெறய dvd s கெடக்கு எல்லா மொழி படமும் பாப்பிங்களா?’


//“ஆமா அவுரு தேசிய ஒருமைப்பாட்டை பேணி வளக்குறாரு. உன் மீசையில தீய வைக்க, பொத்திக்கிட்டு டிவியப் பாருடா !” சுவரில் ஒட்டியிருந்த ராய் நடிகையின் படம் காற்றில் படபடத்தது. //

typical சந்துரு style:)

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP