உருவெளிச் சிதைவுகள் (4) - Adult content
>> Friday, July 25, 2008
‘சனியனுங்களா, உங்கள ஏன்டா கூப்பிட்டு உள்ள வச்சோம்னு இருக்கு, பிளைட் டிக்கட் வேண்ணாலும் எடுத்துதாரேன் கெளம்புங்க முதல்ல!’
“ஏன், நாங்க சலிச்சிட்டோமா, அவ அவ்வளவு வாசமா இருக்காளா?”
"கண்டதும் காதலா, இனிமே நான் அரைக்கெழவன் கூட டூயட் பாடி சல்லாபம் பண்றப்ப சிரிச்சே... மல்லாக்க படுக்க வச்சு மூஞ்சில ....... போயிடுவேன்."
"முதல்ல அத செய்யுடி மலபார். இவன் ஜென்ம சாபல்யம் அடையட்டும்"
‘மலபார் ப்ளீஸ் வாயை மூடு, தெய்வீகக் காதலை கேவலப்படுத்தாத'
“ஒஹோ, தெய்வீகக் காதல் கக்கூஸ் வாசல்லதான் வருமா?”
‘ராய், நீ பேசாத, போய் யார் கூடவாது சேர்ந்து மான் வேட்டையாடு'
‘டேய் அங்க டைல்ஸ ஏன்டா பிறாண்டிட்டு இருக்க?’
‘இல்ல கோபி, கொஞ்சம் skid ஆயிட்டேன், அதான் தொடச்சுட்டிருக்கேன். நீ என்ன திரும்ப மேலே?’
‘அனிதாவ பார்த்ததுக்கப்புறம் skid ஆகுறியா? அனிதா எல்லாம் சொன்னா, ஒண்ணும் பிரச்சினையில்ல, நான் அனிதா பேரன்ட்ஸ்கிட்ட பேசி முடிச்சுடுறேன், நீயும் அப்பா அம்மாவோட வந்துறு, என் கல்யாணத்துல வச்சு முடிவு பண்ணிக்கலாம்'
“போடா மாமா பயலே, இவனே சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலைக்கு வழி விசாரிச்சுட்டு இருக்கான். இதுல இவுரு கூட்டிக் கொடுக்க வந்துட்டாரு. தள்ளுங்கடா தா....ளா, கேன்ஸ் போகணும். லேட் ஆயிடுச்சு."
'ஏய்ய்! அந்தத் தொட்டிய எத்தாத, அதுல யூஸ் பண்ண காண்டம்ஸ் இருக்கு'
"ஏன், கோபி மாமா பார்த்தா இந்த டீல் ஊத்திக்குமா? பேசாம இதையெல்லாம் அனிதாவுக்கு கிப்டா அனுப்பிடேன், ஊதியாவது விளையாடட்டும்."
‘கோபி உனக்கு எதுவும் கேட்டுச்சா?’
‘இல்ல'
‘நீ கிளம்பு, அப்புறமா பேசிக்கலாம்'
‘அப்போ அனிதா?’
‘அவ இங்கதான்பா இருக்கா’ என்றேன் கண்ணாடியை பார்த்தபடி !
‘What do you mean?’
‘Some kind of Visual Hallucination, இதயத்துல இருக்காடா! ’ என்று நெஞ்சைத்தடவினேன் .
"இதோடா, உத்தமபுத்திரன் நெஞ்சத்தடவுறான்,அவ இருந்திருந்தா..."
'செருப்பு பிஞ்சுடும். ப்ளீஸ் என்னய தனியா விடுங்களேன், எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கட்டுமே. நான் வேண்ணா வாரம் ஒருதடவ உங்க கூட இருக்கேன். '
கோபி சிரித்துவிட்டு கிளம்பினான்.
"நீ மூட்றா, எங்கள மேக்கப் இல்லாமப் பார்த்தா உனக்கு எழும்பாதா,அனிதாவ காலையிலே தூங்கி எந்திரிச்சோன்னே போய் பாரு, அத்து எறிஞ்சுடலாம்னு தோணும்."
'ப்ளீஸ் நாம அப்புறமா பேசித்தீர்த்துக்கலாம். ஞாயித்துக்கிழம முடிய இன்னும் 10 மணி நேரம் இருக்கு.'
‘இரு கோபி, நானும் வர்றேன், அவங்க ரெண்டுபேரும் எங்கே?’
‘கார்ல இருக்காங்க'
கீழே இறங்கும் போது உங்கள் அன்பு அறிவிப்பாளன் அக்குள் ஹமித் என்ற குரல் டீக்கடை ரேடியோவில் கேட்டது !
தம்பி யார்கிட்ட பேசிட்டுருக்கீங்க?
இந்தா இவங்ககிட்டதான்.
யாரும் இல்ல?
போய்யா பொட்டைக் கண்ணா।
அனிதா அக்குள் தெரியாமல் கையாட்டி விடை கொடுத்தாள்। நல்ல நாள் பிஸ்கெட் துகள் அக்குளில் ஒட்டியிருப்பதை நான் பார்த்துவிடக்கூடாது என நினைத்திருக்கலாம். அன்று மாலை அண்ணாச்சி கடையில் மளிகை வாங்கும் போது கேட்டேன்.
'அண்ணாச்சி veet இருக்குங்களா?'
'இல்லப்பா, anne french தான் இருக்கு'
'சரி ஒரு கிலோ குடுங்க'
“ஒரு கிலோவா?”
நிலவறையிலிருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பொலிகள் என் காதுக்குக் கேட்கிறது. உங்களுக்கு?
முற்றும்
11 comments:
முற்றும் உள்ளபடி முற்றுமா..
இல்லை இந்த பகுதிக்கு முற்றுமா...
அவனுக்கு முற்றியது, இன்னும் முற்றி, முற்றுப் பெறுமா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்
இந்தக் கதைப் படிச்சா இப்படி எல்லாம் எழுத வைக்குது..
(டேய் சும்மா கதை விடாதேடா..என்கிறான் கன்னாடிக்குள் இருக்கும் டிபிசிடி )
:P
படங்களை விட தலைப்புக்களில் அசத்துகிறீர்கள்.
//படங்களை விட தலைப்புக்களில் அசத்துகிறீர்கள்.//
அப்போ கதைல...? :((
வித்தியாசமான வாசிப்பு அனுபவம். சட்டென்று கதை முடிந்து விட்டதே?
tbcd, கதைய ரொம்ப உள்வாங்கிட்டீங்க போல..! :)
பாஸ், நீட்டிக்கொண்டே போக இது தொடர் அல்லவே !
ஹ்ம், கலக்கல். Flavour of the season போலும். 'பிறழ்வும்' கலையும் அருகருகில் என்பது தெரிகிறது. எனக்குக் கேட்கவில்லை குரல்கள், எப்போதும் கூட்டத்தினூடே இருப்பதனால். ரசித்தேன்.
அனுஜன்யா
அனுஜன்யா, பிறழ்வு சில நேரங்களில் சொர்க்கத்திற்கான கதவுகளைச் சென்றடைய வழி சொல்லக்கூடும் - ரகசியக் குரலில்.
நன்றாக வந்திருக்கிறது சந்துரு..நல்லவேளை பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை:)
உண்மை அபிமன்யு. சில எதிர்ப்புகள் இருந்தாலும் பயந்த அளவிற்கு எதுவும் இல்லை. உன்
"பத்ம வியூகம்" என்ன ஆயிற்று?
புனைவும் (4 பகுதிகளும்) அதற்கான படங்களும் நன்றாக உள்ளது. குரல்களினால் பிறழ்ச்சியடையும் எம.வி.வெங்கட்ராமின் ”காதுகள்” நாவலில் குரல்கள் குறித்த ஆதிக்கம் எப்படி மனப்பிறழ்ச்சியாக உள்ளது என்பதை சொல்கிறது. (இது தொலைக்காட்சி தொடராகக் கூட வந்தது.)
இப்புனைவு நீங்கள் கூறியதுபோல பாலியல் வறட்சியுடன், குரல்களின் புனைவில் உருவாகும் நிலவறை உருக்கள் பற்றிய குறியீடாக உள்ளது. எல்லோருக்குள்ளும் இப்படியாக வெவ்வேறு குரல்களின் நிலவறை இருக்கத்தான் செய்கிறது.
Post a Comment