உருவெளிச் சிதைவுகள் (1) - Adult content
>> Friday, July 25, 2008
எப்படி பாதுகாப்பது எனத் தெரியவில்லை, பூட்டிய நிலவறைக்குள் இருந்து வரும் சப்தங்களை, ஞாயிற்றுக் கிழமை வந்தாலே இம்சைதான். நன்றாக சாத்தி வைக்கலாம் என்றால் கதவும் மசகில்லாமல் க்றீச்சிடுகிறது, நல்லெண்ணெய் வைத்துக் குளித்து கோழிக் குழம்பு சாப்பிட்டால்தான் சூடு அடங்கும். உள்/வெளி தாழ்ப்பாளும் சரியில்லை, அதை முதலில் கவனிக்கவேண்டும். உள்ளே இறங்கி கொரகொரக்கும் தாழ்ப்பாளை சரி செய்ய யோசனையாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.
உள்ளிறங்கிப் பார்க்கும் நொடியில் இவர்கள் ஏறிவிடுவார்கள். தோளில் சாய்ந்து, கன்னத்தில் ஈஷி, மார்பில் படர்ந்து…
‘சட் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா? கைலியப் பிடுச்சு இழுக்கற.’
‘டேய் பாடு, நீதானடா சும்மா பஸ் ஸ்டாப்புல நின்னவள கூட்டிட்டு வந்த, இப்ப பெரிய ஒழுக்கக் கம்மனாட்டி மாதிரி பேசுற’.
‘அடியேய், அன்னைக்கு அந்தத் தெலுங்குப் பட பஸ் ஸ்டாப்புல நல்லா இங்கிலீஷ் பேசுனியேடி?’
‘அதி நேனு லேதண்டி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுடா புடுங்கி.’
‘ஹெக்கேக் ஹேக் கெக்கே ஹே gay…gay ஹெக்கேக் கேக்கெ..’
‘என்ன புரிஞ்சுதுன்னு இந்த மார் பெருத்த மலையாளத்தாளுக்கு இப்படி சிரிப்பு வேண்டியிருக்கு, இருடி மலபார் சிறுக்கி, அடுத்த ஞாயித்துக் கிழம வச்சுக்கறேன். பேரப் பாரு மலபாராம், வேற மாதிரி வச்சுருக்கணும். பொறுடி கொல்டி, கைலி ஈரமாயிடுச்சு, மாத்திட்டு வந்துடறேன். மலபார் கள்ளி, ஒரு சாயலுக்கு நீ அந்த மூணெழுத்து நடிகனோட முன்னாள் காதலி மாதிரியே இருக்கியே, எப்படி? சத்தியமா delusional impression இல்லடி.
தட் தட் தட், என்ன சத்தம் அது?
“கதவத் தட்றாங்கடா செவிட்டுக் …”
காவிரில தண்ணி விடுங்கன்னு தமிழ்நாடே கத்துறது கேக்காது, இந்தக் கன்னடத்து கபோதிக்கு…. அடச்சே, இந்தக் கன்னடத்துப் பைங்கிளிக்கு ரொம்ப பெருசு – காது. கரீக்டா சொல்ட்டாப்பா..!
‘இருய்யா வாரேன்.’ அடிங்கொ…தட்றத நிறுத்துங்கடா. இந்தப் பாழாய்ப்போன விருந்தாளிகள்…ஒரு நவ யுவன், கையில்லாத ரவிக்கை அணிந்த பெண் – நவ யுவதி?, ஏஜ்டு பெரிய மீசைக்கிழம். விருந்தோம்பல் தமிழனின் அணிகலன் என ஏதோவொரு சங்கப் புலவன் சொன்னதாய் ஞாபகம். மசுருங்க என்னத்தப் புடுங்குறதுக்கு இப்ப வர்றானுங்க.
‘சார், என்ன வேணும்?’
‘டேய் என்னடா? நாந்தாண்டா கோபி, இவ அனிதா (அயானா – னு வச்சுருக்கலாம்) என் colleague, அது அவளோட மாமா.’
அவளுக்கா இல்ல எல்லாருக்குமா? எனக் கேட்கத் தோன்றியதை நாக்கைக் கடித்து நிறுத்திக்கொண்டேன்.
‘என்னடா அப்படி பாக்குற? என்னை மறந்துட்டியா?’
‘இல்ல நீங்கள்லாம் உண்மையா. இல்ல பிம்பங்களானு பார்த்தேன்.’
‘Are you alright man?’
‘ya, am alright. just kidding you buddy. கொஞ்சம் ஞாபக மறதி அதிகமாயிடுச்சு, that’s all, you please come in.’
“பொய் சொல்றான், அவனுக்கு schizophrenia + துரித ஸ்கலிதம்” - நிலவறையிலிருந்து கொல்டி ஹீரோயினின் குரல். இருடி வந்து உன்ன வச்சிக்கறேன். “முதல்ல கைலிய மாத்துறா பன்னாட.”
‘எனக்கும் அனிதாவோட அக்காவுக்கும் கல்யாணம், அதான் பத்திரிக்கை கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்.’
‘Oh, great.’
பெரிய மீசை டிவி ரிமோட்டை எடுத்து ON செய்தான். The room is on active depressive mode.
“அக்காவத்தான கட்டப்போறான், இவ என்ன இலவச இணைப்பா?” என்று அந்த நெட்டை கதாநாயகன் டிவியில் கேட்டது கோபிக்கு கேட்டிருக்க நியாயமில்லை. Typical illusion.
‘சரி நீ இவுங்களோட பேசிட்டு இரு, நான் அடுத்த தெருவுக்கு போய் ரவிக்கு இன்விடேசன் கொடுத்துட்டு வந்துடறேன்.’
‘வேண்டாம் கோபி, தயவுசெய்து இந்த பிம்பங்களுக்கு மத்தியில் இவர்களை தனியே விட்டுச்செல்லாதே, என்னால் சமாளிக்க இயலாது।’ போய்விட்டான், மூன்று பரிமாணமுள்ள கோபியால் இந்த குரல்களை, பிம்பங்களைக் கண்டுகொள்ள முடியாது. இல்லையே, நான் பேசியது கேட்டிருக்க வேண்டுமே, ஒருவேளை நானும் மாயக்குரல் கொண்டுவிட்டேனா?.
தொடரும்...
6 comments:
பொன்னியின் செல்வனில் வர மாதிரி illusion ? இந்த சிறுகதை எத்தனை பார்ட் வரும்?
நன்றி செல்வி.இது பொன்னியின் செல்வன் இல்ல. fennyin செல்வன் :))
சந்திரசேகர்
உங்களை புதுவித பரிமாணத்தில் பார்க்க பிடித்திருக்கிறது.உங்களின் கவிதைகளை வாசித்து பின்னூட்டமிடாமல் சென்றுவிடுவேன் அதிகபட்சம் ஒரு நல்ல கவிதைக்கு என்ன பின்னூட்டமிடுவது நன்று என்பதைத் தவிர...
குரல்களை நீங்கள் கையாண்டிருக்கும் விதம் அற்புதம்..புரிவிக்க பெரிதாய் மெனக்கெடாமல் தன் போக்கில் குரல்களை மோதவிட்டிருப்பது கோபியின் யுக்தி..
/‘வேண்டாம் கோபி, தயவுசெய்து இந்த பிம்பங்களுக்கு மத்தியில் இவர்களை தனியே விட்டுச்செல்லாதே, என்னால் சமாளிக்க இயலாது।’ போய்விட்டான், மூன்று பரிமாணமுள்ள கோபியால் இந்த குரல்களை, பிம்பங்களைக் கண்டுகொள்ள முடியாது. இல்லையே, நான் பேசியது கேட்டிருக்க வேண்டுமே, ஒருவேளை நானும் மாயக்குரல் கொண்டுவிட்டேனா?/
குரல்களால் அலைக்கழிப்படும் ஒருவனின் மிக அதிகபட்ச பயம் இதுதான்..தன்னுடைய குரலே மாயத்தன்மை கொண்டதா என அதிர்வுறுவதே முற்றும் பித்தான நிலையாக கருதப்படுகிறது...
தொடர்ந்து எழுதுங்கள்....
ஊக்கமான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அய்யனார். :)
இப்பதான் படிச்சேன். முதல் பகுதி - இந்த form பிடித்திருக்கிறது.
மற்ற பகுதிகளையும் படிக்கணும் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.
Post a Comment