தளத்தின் பெயர் மாற்றம்

>> Monday, December 14, 2009அன்பு நண்பர்களே, 'நெய்தல்' என்ற பெயரில் இயங்கி வந்த எனது இவ்வலைப்பூ இனி
'ஷீலாதமிழ்செல்வி' என்ற பெயரில் தொடர்ந்து இயங்கும் என உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். பெயர் மாற்றத்திற்கு பெரிதாய் எதுவும் காரணமில்லை. வாழ்வே இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாய் சென்று கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்றமாயை..! :) அதனால்தான். (நம்புங்கள்! நியூமராலஜி எல்லாம் இல்லை!)

சில நேரங்களில் வாழ்க்கைக்கான அல்லது வாழ்வதற்கான அல்லது தொடர் இயக்கத்திற்கென தேவைப்படும் கச்சாப் பொருட்கள் இவ்வகையிலான சிறு சிறு மாற்றங்களிலேயே பொதிந்து இருப்பதாய் நம்புகிறவன் நான். எப்போதாவதுதான் எழுதுவது, பதிவிடுவதோ ஆறு மாதங்களுக்கொரு முறை! ஆயினும் எப்போது பதிவிட்டாலும் பின்னூட்டமிட்டோ அல்லது தனி மடலிலோ ஊக்கமளித்து வரும் அனைத்து நண்பர்களின் தொடர் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நன்றி!

7 comments:

அனுஜன்யா December 14, 2009 at 1:40 AM  

சந்திரா,

நீங்கள் மிக மிக குறைவாக எழுதுவதில் வருத்தப்படும் முதல் நபர் நான்தான். இதுக்காகவாவது இந்தப் பெயர் மாற்றம் வேறு மாற்றங்களையும் செய்யட்டும்.

வாழ்த்துகள் சந்திரா.

அனுஜன்யா

rajan RADHAMANALAN December 14, 2009 at 2:09 AM  

வாங்க வாங்க !

யாத்ரா December 14, 2009 at 7:03 AM  

நண்பா,

//வாழ்வே இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாய் சென்று கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்றமாயை//

எல்லாமே தோற்றமாயை தான் நண்பா, கடந்து கொண்டேயிருப்பது மட்டும் தான் நம்மால் செய்ய முடிந்தது ஒரு மௌனசாட்சியாய்.

Saravana Kumar MSK December 14, 2009 at 12:46 PM  

//வாழ்வே இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாய் சென்று கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்றமாயை..//

மாயையெல்லாம் இல்லை.

சரி. சரி. பெயர் மாற்றத்தோடு நிறைய எழுதுங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் December 14, 2009 at 9:27 PM  

நேற்றே இந்த இடுகையைப் படித்தேன். தமிழ்செல்வியா அல்லது தமிழ்ச்செல்வியா என்று ஒரு சந்தேகம். சரி, இலக்கண சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் ஜ்யோவ்ராம் என்று பெயர் வைத்துக் கொள்ள முடியுமா என்ன என்று விட்டுவிட்டேன் :)

இனி(யாவது) நிறைய எழுதுங்கள்.

RVC December 15, 2009 at 4:31 AM  

அனு, ராஜன், யாத்ரா, சரா - அன்பிற்கு நன்றி

RVC December 15, 2009 at 4:36 AM  

குருஜி, ஒற்று மிகும், அதான் சரி. ஆனா இங்க மிகாது - அது தவறாய் இருந்தாலும் சரியே :)
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
(இருக்கும்படியே எழுதுவதா? அல்லது இலக்கணப்படி மாற்றுவதா? பொண்ணுங்கன்னாதான் பிரச்சனைனா, பேர்லயுமா?)
மொழில விளையாடுறதுனு முடிவு பண்ணீட்டிங்க, அப்புறம் எதுக்கு குருஜி உங்க பெயருக்கு இலக்கணம் எல்லாம்..! :)

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP