சிதைவுகளின் நிழல்
>> Monday, December 14, 2009
ஒரே கத்தியில் இருந்துதான்
வெளிக்கிளம்புகின்றன
போருக்கான பறையும்
சமாதானத்துக்கான புறாவும்
சம்போகிக்கும்போது பிறப்பு நிச்சயமில்லை
பிறந்துவிட்டால் சாவு நிச்சயம்
சித்தர்மொழி போதையில் பீறிடுகிறது
இருவர் அமர்ந்து ஆடும் ஆட்டங்கள்
சுவாரசியமற்றவை- பெரும் களமும்
கூட்டமும் தேவைப்படுகிறது
வன்முறை வெறியாட்டத்திற்கு
இருப்பதில் எளிதானது
வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது
மற்றும் காதலிப்பது
பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது
(எழுதியது-2007ல்)
14 comments:
\\பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது\\
என்ன சொல்றது நண்பா, இந்த வரிகளைப் படித்துவிட்டு,,,,,,,,,
Welcome Back Bro.. :)
சான்சே இல்லை.
இந்த கவிதையை நான் எழுதிருக்கணும்.. நீங்க எழுதீட்டீங்க.. :)
kavithai nala iruku thala
old is gold
per mathinathukku karanam ethum ilaya :)
/இருப்பதில் எளிதானது
வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது
மற்றும் காதலிப்பது
பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது//
நல்லா இருக்கு, எழுதியது என்றாலும் எப்போவும் ரசிக்கும்படி இருக்கு நண்பா.
கவிதை நல்லாயிருக்கு.
யாத்ரா, என்ன செய்ய நண்பா- வாழ்க்கை செலுத்தும் தடம்..?! :)
சரா, அன்பிற்கு நன்றி :)
கென்., said...
//per mathinathukku karanam ethum ilaya :)//
தல, உங்களுக்கு தெரியாததா?
பூங்குன்றன், நன்றி
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிதை நல்லாயிருக்கு.//
குருஜி, நன்றி!
மிக யதார்த்தமான வரிகள். ஈழப்பிரச்சனைக்கு அப்படியே ஒத்துப்போகின்றன. 'சித்தர்மொழி'யில் இப்போது நிறையப் பேர் பேசக் கிளம்பியிருக்கிறார்கள். இருப்பதில் எளிதானதாக இருப்பது வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது என்பதிலிருக்கும் எள்ளலை ரசித்தேன். ஏனென்றால் அதில் நானும் இருக்கிறேன்.
பெயர் மாத்தின சடுக்கோடு படபடன்னு பழைய கவிதை எல்லாம் எடுத்து போடுங்க. நல்லா இருக்கு மேல சொன்ன கவிதை.
thamilnathi, lavanya - thanks!
Post a Comment