நிசப்தத்தில் கலத்தல்/ மழைக்கான காத்திருப்பு

>> Friday, July 30, 2010



*நிசப்தம் மேவிய
கடல்
கவிழ்ந்து மிதக்கும்
படகு


*தீராத வன்மத்தின்
இசை அளபெடைகளைத்
தொகுத்துக் கொண்டிருக்கிறேன்
எதனுள்ளும் அடங்காமல்
திமிறுகிறது
உன் காதல்


*என்னை
மிருகம் என்றழைக்கிறாய்
பேரன்பின்
பெயரால்
என்னைப் புசிக்கிறாய்.
உன் பெயெரென்ன சகி?


*மீண்டும் தித்திப்பாய்
இருக்கிறது
நுரைக்கும் மதுவும்
பொங்கும் இசையும்
பெருகும் காமமும்
ஒழுகும் குருதியும்
முத்தமிட்டுத் தீராத
உன் இதழ்களும்.


*வெடித்துவிழும்
காமத்தின்
விதையிலிருந்து
துளிர்க்கிறது
உனக்கான பிரத்தியேக
முத்தத்தின்
சுட்டுவிரல்.


*நிசப்தத்தின்
பேச்சொலியில்
எரிமலையின்
அமைதியெனத் தளும்பும்
கண்களில் இருந்து
பறக்கிறது
பெயர் தெரியாப் பறவை
நீ இருக்கும் திசை நோக்கி.


*மிதக்கும் தக்கையின்
ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது
காலத்தின் நிசப்தம்^

^ ஏற்கனவே எழுதிய கவிதையிலிருந்து ஒரு வரி.

7 comments:

Joe July 30, 2010 at 12:08 PM  

தூசி படிஞ்சு கெடந்த வலைப்பூவில வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை!

chandru / RVC August 1, 2010 at 3:56 AM  

ஜோ, நன்றி ;)))))))

PRINCENRSAMA August 1, 2010 at 5:37 AM  

//தீராத வன்மத்தின்
இசை அளபெடைகளைத்
தொகுத்துக் கொண்டிருக்கிறேன் //

9-ஆம் வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தை இதுக்குத்தான் ஜோதிமணியிலிருந்து வாங்கினியா நண்பா!

எப்படிடா இப்படியெல்லாம் உனக்குத் தோணுது.... என்னமோ போடா!

PRINCENRSAMA August 1, 2010 at 5:38 AM  

aiyyayoo ennennamo panraainga.... namakku onnum vilangalaiyeh... che... en nanban koodiya seekiram periyar kavigan aayiduvaanoo..

அய்யய்யோ என்னென்னமோ பண்றாய்ங்களே....

நமக்கு ஒன்னும் விளங்கலையே.. சே.. என் நண்பன் கூடிய சீக்கிரம் பெரிய கவிஞன் ஆயிடுவானோ?

PRINCENRSAMA August 1, 2010 at 5:46 AM  

மேற்கண்ட இரண்டு கமெண்டுகளையும், எனது split personality-ஆன கமெண்ட் கட்டதுரை என்பவர் எனது id-இலிருந்து போட்டிருப்பதால், அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதை இங்கே அந்நியன் தனமாக தெரிவித்துக் கொள்கிறேன்...

@: கவிதைக்கு கமெண்ட் போட்டா தப்பா...?
#: தப்பில்லைங்க...
@: வரிக்குவரி கிண்டலடிச்சு கமெண்ட் போட்டா?
#: தப்பு மாதிரி தாங்க தெரியுது....

மீண்டும் அவனது அத்துமீற்.....

யே..... இந்த கட்டதுரை கமெண்டுக்கு எவனாவது கமெண்ட் போட்...

ஆஆ...........

PRINCENRSAMA August 1, 2010 at 5:58 AM  

நட்பு நாள் வாழ்த்துகள், நண்பா!

உயிரோடை August 10, 2010 at 7:51 AM  

ஆர்விசி,

எல்லா குறிப்புகளும் அழகாக வந்திருக்கின்றன. நிறைய எழுதுங்கள்.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP