இங்கே ஒரு காதல் கதை - 5
>> Thursday, April 22, 2010
பார்வை-1
9
நேற்றைய இரவில் என்றைக்குமான அழைப்பைவிட அவள் குரலில் மகிழ்ச்சி தளும்பியது.
‘ஹேய், கிளம்பி ரெடியா இரு, லெட்ஸ் கோ ஃபார் டான்ஸ்’
‘நானே உனக்கு கால் பண்ணலாம்னு நெனச்சேன்,போகலாம்’
ஒளிரும் நதியின் ஊடாக கைப்பிடித்து நடக்கத் தொடங்கி அதிரத்துவங்கிய இசையில் துடிக்கத் துடிக்க நடனமாடி வியர்த்திருந்தாள்.
இசை சற்றே ஓய்ந்த தருணத்தில் ‘ஒன் டகீலா, ஸ்ட்ரெய்ட் ஷாட்’ என்றவாறு அருகே வந்து அமர்ந்தவளிடம் ‘நேற்றும் கனவில் வந்து இம்சித்த நீலவண்ணச் சிறகு தேவதை நீதானா?’ என்றேன்.
தனிமையின் நீண்ட சுவடுகளை அடையாளமாய்க் கொண்ட என் அவல வாழ்வின் வெளிப்படுத்தலும், அன்பிற்கு ஏங்கும் உச்ச பரிதவிப்பிலுமாய் அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன். நெகிழ்வின் கைப்பற்றல்களை மென்மையாய் விடுவித்துக்கொண்டவள், பரிதாபமான பார்வையோடு சொன்னாள் ‘ப்ளீஸ்,குழப்பிக்காதடா!’
"மனதைப்பிளக்கும்
அரூப இசையுடன் நெடும்பயணத்தின்
மைல்கல்லில்
அமர்ந்திருக்கிறாள்
சிட்டுக்குருவிகள் பறந்துதிரியும்
இசைக்குறிப்புகளுக்கு சொந்தக்காரி"
4 comments:
நண்பா வார்த்தை பிரயோகங்களில் அதிர்கிறது மனது.
Wav......
Very Nice....
ஒத்த சிந்தனையாக நடன விழாவிற்கு போக இசைகிறாள். பின் குழப்பிகாத என்று குழப்பவும் செய்கிறாள் ம்ம்ம்ம்
//
"மனதைப்பிளக்கும்
அரூப இசையுடன் நெடும்பயணத்தின்
மைல்கல்லில்
அமர்ந்திருக்கிறாள்
சிட்டுக்குருவிகள் பறந்துதிரியும்
இசைக்குறிப்புகளுக்கு சொந்தக்காரி"
//
அருமை!
பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை நண்பா!
Post a Comment