படைப்பின் பெருவெளி
>> Tuesday, August 7, 2007
அன்று அவளுக்கு நல்ல நாள்…
அதிகம் சிரமப்படவில்லை அவள்,
கடவுளை சிருஷ்டிக்க ஒரு துளி அமிர்தம் போதுமானதாயிருந்தது.
தொப்பூழ்க்கொடியறுத்து சுத்தப்படுத்த தேவைப்பட்டது
ஒரு குவளை கண்ணீர் மட்டுமே.
அவள் சிருஷ்டியின் தகிப்பில்
வெளியில் மூர்ச்சையாகி
சிதைந்து கொண்டிருந்தது காலம்…
உள்ளிருந்து பெருவெடிப்பின் ஓசை
பிரசவித்தவள் கல்லாய் கிடந்தாள்…
கடவுள் பேசத்தொடங்கியிருந்தார் –
“ஆதியும் அந்தமும் அற்றவனாகிய
‘நான்’’’ என.
எல்லாம் ஒன்றாகி, ஒன்றும் இல்லையென்றாகும்
ரசவாதம் நிகழ்ந்து கொண்டிருக்க
வெறித்துப் பார்த்தவாறு கிடந்தது காலத்தின் சடலம்.
3 comments:
very good kavithai, keep it up. sorry for English.
thanks for your appreciation.
அருமையான கவிதை என்று சொல்ல புரிதல் வேண்டும். இரண்டு முறை படித்ததில் மிகப் பிரம்மாண்ட எண்ணங்கள் வருகின்றன. மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
அனுஜன்யா
Post a Comment