இங்கே ஒரு காதல் கதை - 3
>> Sunday, April 18, 2010
5
“மழையின் மீதான
பெருவிருப்புகளை
மீட்டெடுக்கிறது
இந்த காதல்
உன் கூந்தல் இழைபற்றி
பறந்து கருவானில் படரும் வேட்கை...”
‘ஏய் நிறுத்து..ஹோல்ட் ஆன்...ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் மேன்’
‘என்ன ஆச்சு?’
‘உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி கவிதைன்ற பேர்ல மொக்கை போட்ற?’
‘ஹூம், ஏன் பிடிக்கலையா?’
‘இந்த காதல் - இல்ல அது. க் விட்டுட்ட... ‘
‘புத்திசாலி பொண்ண லவ் பண்ணா இதான் பிரச்சினை’
‘கண்டிப்பா. லவ் பண்றதுன்னு முடிவெடுத்தப்பவே நீ முட்டாளாயிட்ட. அப்புறம் என்ன புதுசா கவலைப்படுற?’
‘உன்கிட்ட நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்’
‘நீ ஏன் என்கிட்ட இவ்ளோ சப்மிஸிவா போகணும். அடிமை மாதிரி இருக்காத, இயல்பா இரு’
‘அடிமைதான் - உன் அன்புக்கு’
‘இப்படி வசனம் பேசுறத நிறுத்தமாட்டியா? எல்லா முட்டாளும் அடிமையாகிறதில்லை... எல்லா அடிமையும் முட்டாளும் இல்லை’
‘ப்ளீஸ், இந்த வியாக்யானத்தை நிறுத்து’
‘சரி, நிறுத்திட்டேன். வா காதலிக்கலாம்’
6
‘ஏம்பா, இவ்ளோ குளிரா இருக்கு?’
‘ஏசி ஹோட்டல்னா அப்படித்தான் இருக்கும்’
‘நல்லாயிருக்குல்ல’
‘ம்.ம்ம்’
‘ஏம்பா ஒரு மாதிரி இருக்கீங்க?’
‘அதெல்லாம் ஒன்னுமில்லை. என்ன சாப்பிடுற சொல்லு’
‘நீயே சொல்லுப்பா’
‘நீதான இங்க வரணும்னு ஆசைப்பட்ட. நீயே சொல்லு’
‘கோவமா?’
‘அப்டிலாம் இல்ல. சீக்கிரம் ஆடர் கொடு’
‘ம், சரி’
‘எதுன்னாலும்100 ரூபாய்க்குள்ள முடியுற மாதிரி சொல்லு’
‘ம், சரி... என்ன எதுவுமே 45 ரூபாய்க்கு குறைச்சலா இல்ல?’
‘நீதானடி நேத்து குதிச்ச, இங்க திங்க வரணும்னு. இப்ப நொய் நொய்னு கேள்வி கேக்குற?’
‘இல்லப்பா. எனக்கு இவ்ளோ ஜாஸ்தியா இருக்கும்னு தெரியாது’
‘ஹும்ம்ம்...சரி விடு, எனக்கு எதும் வேணாம். நீ நல்லா சாப்பிடு’
‘இல்லப்பா, வாங்க போலாம். சாப்பிட்டா ரெண்டு பேரும் சாப்பிடணும். இல்லாட்டி வேணாம்.’
‘அடி லூசு, கோவிச்சுக்கிட்டியா?’
‘சே, அதெல்லாமில்ல.’
‘சரி, சாப்பிடலாம். ரெண்டு தோசை சொல்லவா?’
‘ம், சொல்லுங்க’
‘வெளில ஜாதிப்பூ விக்கிறாங்க பார். போறப்போ வாங்கிக்கலாம். ம்?’
‘ம், சரி. ரெண்டு முழம்’.
6 comments:
உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது...
thanks sangavi ;)
முள்ளும் மலரும்..
காதலை வெளிப்படுத்த தெரிந்தவனை, தள்ளி நிற்கிறது காதல்.
முட்டாள், நிச்சயம் நீயில்லை நண்பா!
//மழையின் மீதான
பெருவிருப்புகளை
மீட்டெடுக்கிறது
இந்த காதல் //
க் போடலைன்னாலும் இந்த கவிதை நல்லா இருக்கு
முரளி - நன்றி நண்பா!
லாவண்யா - நன்றிங்க!
சந்துருவின் கதைகள் அனைத்தும் கவிதைகள். அதன் வலிகள் என்னால் உணர முடிகிறது
Post a Comment