இங்கே ஒரு காதல் கதை - 1
>> Thursday, April 15, 2010
1
'போகாத, நில்லு'
'எதுக்கு?'
'நான் உன்ன அளவுக்கு அதிகமா காதலிக்கிறேன், புரிஞ்சுக்க'
'அது என்ன, காதல்ல அளவு அதிகமான காதல், குறைவான காதல்னுலாம் இருக்கா என்ன? டேய், காதலிச்சா முழுசா காதலிக்கணும். வெறுத்தாலும் முழுசா வெறுக்கணும். மனசுக்குள்ள கட்டம் போட்டு வச்சுக்கிட்டு போலியா வாழ முடியாது. நீ இன்னும் மெச்சூர் ஆகல. டயலாக் விடாம போய்டு'
'இல்ல, நீ இல்லாட்டி செத்துருவேன்'
'செத்துடு'.
2
'என்னடா, அப்படி பாக்குற?'
'இல்ல, சேலை கட்டிருக்கப்ப இவ்வளவு அழகா இருக்கியே, சேலை கட்டாம..'
'ச்சீய், எப்போ பாரு.. உனக்கு இந்தப் பேச்சுதானா?'
'இல்லம்மா, சேலை கட்டாம-சுரிதார்ல எப்படி இருப்பன்னு சொல்ல வந்தேன்'
'பொறுக்கி, உன்ன எனக்குத் தெரியாது. என்ன பக்கத்துல வச்சுக்கிட்டே ஒருத்திய விடமாட்டே'
'அழகெல்லாம் ரசிக்கப்படணும் கண்ணம்மா'
'ஓ! என்னய யாராவது ரசிச்சா?'
'சே! என் அளவுக்கு மத்தவங்க ரசனையும் மோசமா இருக்காதுன்னு நம்புறேன்...'
'ராஸ்கல்... உன்ன...என்ன பண்றேன் பாரு'
'ஏய், நெஞ்சுல குத்தாதடி... மாரடைச்சு செத்துட கித்திடப் போறேன்'
'செத்துடு'.
8 comments:
அருமை!
எங்கே பாத்தாலும் ஒரே காதல் கதைகளா தான் இருக்கு, நல்லா இருங்க! ;-)
நடத்துங்க.
நல்லாதான் இருக்கு.
கதையா ரொம்ப சின்னதா இருக்கே. கவிதை வடிவிலும் இல்லையே. இரண்டும் காதல் தானா?
ஜோ - "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?" ;-) நான் என்னை சொல்லலை ;-))))
அகநாழிகை நன்றி.
தமிழினி - இணைத்தாயிற்று. ;-) நன்றி
லாவண்யா - கதைதான்னு நம்புனாலும் நம்புவீங்க போல, இரண்டும் காதல்னு நம்பமாட்டீங்க போல..! ;-)
ayutha eluthu mathri different characters of lovers r shown,,awesome
ஐ.. எனக்கு பிடிச்சிருக்கு. :D
Post a Comment