இங்கே ஒரு காதல் கதை - 4

>> Wednesday, April 21, 2010



7

‘இல்லடா,இது சரியா வரும்ணு தோணலை. விட்ரலாம்’

‘விட்ரலாம்னா... புரியல’

‘விட்ரலாம்னா... விட்ரலாம். அவ்வளவுதான்’

‘..............’

‘முறைக்காத. நிறைய பிரச்சினை வரும், ரெண்டு ஃபேமிலியும் அதிகமான இழப்பை சந்திக்கும்’

‘சும்மா அளக்காத. இத்தன நாள் இது உனக்கு தெரியாதா? உங்கப்பன் நல்லா அழகா, படிச்ச, வசதியான மாப்பிள்ளை பார்த்துருப்பான், அதான?’

‘எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத’

‘ஏய், நிறுத்துடி...நான் உனக்காக கொச்சின் இன்ஸ்டிட்யூட் M.tech சீட்டை வேணாம்னு சொன்னவன்’

‘நானா உன்னப் போக வேணாம்னு சொன்னேன்’

‘அன்னிக்கு நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலை? உன்ன ஒரு நாள் பாக்காட்டியும் செத்துருவேன்னு சொல்லலை?’

‘இல்ல, நான் அழலை... அப்படி சொல்லவும் இல்லை ’

‘ங்கோத்தா... பொய் சொல்றியே வெக்கமாயில்லை’

‘ஏய்ய்... மரியாதையா பேசு’

‘மூணு வருசம் காதலிச்சவன்கிட்டயே இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு கூலா சொல்ற... உனக்கென்னடி மரியாதை?’

‘லவ் பண்ணா? கல்யாணம் பண்ணிக்கன்னு சட்டம் சொல்லுதா?’

‘ஓ, சட்டத்தக் கேட்டுதான் மேடம் லவ் பண்ணீங்களா?’

‘என்ன பண்ணனும்கிற இப்போ?’

‘என்னைத் தவிர நீ யாரையும் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாது’

‘அத சொல்றதுக்கு நீ யாரு?’

‘என்னடி சொன்ன?’

‘இனிமேல், அடி புடின்ன... போலீஸ்ல ஈவ் டீசிங் கம்ளைண்ட் கொடுத்துருவேன்’

8

‘நான் அவன எப்டிலாம் லவ் பண்ணேன் தெரியுமா?’

‘புலம்புறத நிறுத்துறியா?’

‘இல்லடா, என்கிட்ட என்ன குறை கண்டான் அவன்... எப்படி இன்னொருத்திய..சே, நெனைக்கவே கஷ்டமா இருக்குடா’

‘ம்..ம்ம்..’

‘வாய் விட்டுக் கத்தி அழணும் போல இருக்குடா’

‘சரி, அழு’

‘உடனே என்னைய கோழைன்னு நெனைக்காத.... நான் அழுவுறனா?’

‘கண்ல இருந்து தண்ணி வந்தா அதை அப்படி சொல்றதுதான் வழக்கம்’

‘முடியலடா, அடக்க நெனைக்கிறேன், அடக்கிக்க முடியலை’

‘சரி...சரி.. இங்க பார்... என்னயப் பார்’

‘உன் தோள்ல சாஞ்சுக்குட்டா நீ என்னை தப்பா நெனப்பியா? சாஞ்சுக்குறேண்டா ப்ளீஸ்’

‘......’
‘.....’
‘ஏய்ய்ய்... ஏண்டா கன்னத்துல முத்தம் கொடுத்த?’

‘நீ அழறப்போ ரொம்ப அழகா இருக்க... அதான்’

‘அப்படியா?! அப்புறம் ஏண்டா அவன்... இன்னொருத்திய..?’

‘ப்ச், ப்ளீஸ்... வேணாமே’

‘ம், சரி. வேணாம்... நாம இப்படி கட்டிப்புடிச்சுட்டே இருந்துடலாமாடா?’

‘ம்... இருந்துடலாம்.’

3 comments:

Rajakamal April 21, 2010 at 6:09 AM  

காட்சியை சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை ஸாரி.

உயிரோடை April 21, 2010 at 7:39 PM  

ப‌டிக்கும் போது வ‌ரும் நிறைய‌ விச‌ய‌ம் தோணுது சொல்ல‌ முடிய‌லை.

chandru / RVC April 22, 2010 at 11:34 PM  

@ rajakamal - ;-))))

@ லாவண்யா - என்னாலயும் எதையும் முழுசா சொல்ல முடியும்னு தோணலைங்க! ;-(

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP